டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது காட்டுமிராண்டி தாக்குதல் நடத்திய ஓன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து மன்னார்குடியில் தலைமை தபால் நிலையம் முன்பு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி உயிர் பலி வாங்கிய ஒன்றே பாஜக அரசு கண்டித்தும் டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தை நிறுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக எழுதி கொடுத்து நிறைவேற்ற மறுத்து விவசாயிகள் வாழ்வில் விளையாடும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்தும், மின்சார சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் திருத்திய தொழிலாளர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அறிவித்திட வேண்டும் , நூறு நாள் வேலைக்கு தினக்கூலி ரூ 600 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தலைமை தபால் நிலையம் முன்பு ( ஐக்கிய விவசாயிகள் முண்ணனி )தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கு ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஒன்றிய அரசு ஒப்புகொண்ட கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் போரட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு தொகையை மோடி அரசு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்
பேட்டி
1, பி.எஸ் .மாசிலாமணி தமிழ்நாடு விவசாய சங்கம்