இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருந்திருந்தால் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசியை 5 ஆண்டுகள் தர வேண்டிய அவசியம் இருக்குமா என மன்னார்குடியில் தஞ்சை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி .

இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருந்திருந்தால் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசியை 5 ஆண்டுகள் தர வேண்டிய அவசியம் இருக்குமா என மன்னார்குடியில் தஞ்சை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகர் தளபதி அவர்களின் 71 வது பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் பந்தலடியில் நடைபெற்றது . இந்த பொதுக்கூட்டத்தில் தஞ்சை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் , மாநில மாணவரணி துணைச் செயலாளர் அமுதரசன் , நகர செயலாளர்வீரா கணேசன் , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு , தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன்,  மாவட்ட கழக அவை தலைவர் தன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் ராஜபூபாலன் , மன்ற தலைவர் சோழராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர் அப்போது பேசிய தஞ்சை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாழநிமாணிக்கம் பேசியதாவது பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு பதவியேற்று நாடாளுமன்றத்தின் உள்ளே முதல் முதலாக நுழைந்தார் அதற்கு பிறகு எத்தனை முறை வந்திருக்கிறார் . இந்த தடவை பாராளுமன்றத்தில் மோடியை அழைத்து வரவேண்டும் என்பதற்காக ஒரு நம்பிக்கை இல்லை தீர்மணம் கொண்டு வந்தோம் அந்த கூட்டத்திலும் பங்கேற்காமல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பங்கேற்க வைத்தார் . ஒரு பிரதம அமைச்சர் நாடாளுமன்றம் நடை பெறுகின்ற போது வெளிநாடு செல்லக்கூடாது . வாரந்தோறும் கேள்வி பதில் வந்து கொண்டே இருக்கும் அந்த கேள்வி பதிலுக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும் .  இந்த பத்து ஆண்டாக எந்த பதிலும் கூறவில்லை ஆனால் தமிழ்நாட்டில் நீங்கள் திமுக இருக்காது என்று கூறுகிறீர்கள் ஏன் வேறு பெயர் ஏதும் மாற்றப் போகிறீர்களா ? மோடி அவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விருப்பப்படுகிறேன் நீங்கள் முதன்முதலாக பாராளுமன்றத்தில் வந்தபோது ஒரே ஒரு பாஜக உறுப்பினரை பெற்றிருந்தீர்கள் .  திமுக சட்டமன்றத்தில் நுழையும் பொழுது 15 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தோம் . திமுக பாசனத்தில் புழுத்த புழு இவை எல்லாவற்றையும் தின்றுவிட்டு வாழக்கூடிய அரசியல் கட்சி ஏனென்றால் இதற்கு ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு இந்தியா பொருளாதாரவளர்ச்சியில் இருக்கிறது என்று பிரதமர் மோடி கொக்கரிக்கிறார் மோடி சொல்வதை ஏற்காவிட்டாலும் பிரதமர் மோடி சொல்வதை ஏற்க வேண்டும் ஆனால் தற்கொலை எந்த மாநிலத்தில் அதிகமாக நடைபெறுகிறது மூன்று ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் 25 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இது யாருடைய மாநிலம் மோடி இருக்கின்ற மாநிலம் . ஒரே நாளில் அந்த மாநிலத்திற்கு இரண்டு லட்சத்தி65,000 கோடியை நிதியாக ஒதுக்குகிறார் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக .  நீங்கள் வறுமை நீங்கி விட்டது உலக பொருளாதாரத்தில் இந்தியா வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறீர்கள் இன்றைக்கு 5 கிலோ அரிசியை 5 வருடத்திற்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருப்பது யார் அன்னதான திட்டத்தின் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருந்திருந்தால் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி தர வேண்டிய அவசியம் இருக்குமா ? அனைவரது வீட்டில் செல்வம் நிறைந்திருந்தால் யாரும் இலவச அரிசி வாங்க மாட்டார்கள்  அப்படி என்றால் உங்க உங்கள் பேச்சில் அறிக்கையில் முரண்பாடு உள்ளது இதை யாரிடத்தில் வெளிப்படுத்துவது என்றார்  . அதனை தொடர்ந்து பேசிய மாநில மாணவர் அணி துணை செயலாளர் அமுதரசன் பேசியதாவது இன்றைக்கு  உச்சநீதிமன்றம்  போஸ்டர் அடித்து ஒட்டுகிறது கொலை குற்றவாளிகளை பாதுகாக்க கூடிய கேடுகெட்ட வேலையை செய்யக்கூடிய அரசு பாஜக மோடிஅரசு குற்றவாளிகளை கண்டா வர சொல்லுங்க என்று உச்ச நீதிமன்றம்  போஸ்டர் அடித்து ஒட்டக்கூடிய இழிவான வேலையை மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது . இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரே ஒரு குழந்தை கூட பள்ளியில் படிக்காமல் இருந்திருந்தால் இடையே பள்ளியை விட்டு நிறுத்தி இருந்தால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் போன் செய்து அல்லது அவர்களது வீட்டிற்க்கே சென்று ஏன் பள்ளிக்கு குழந்தையை அனுப்பவில்லை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு செல்கின்ற வேலையை தமிழ்நாடு அரசு செய்துகொண்டிருக்கிறது .
Previous Post Next Post