கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி மன்னார்குடியில் அதிமுக சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மனித சங்கிலி போராட்டம் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு .

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி மன்னார்குடியில் அதிமுக சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  மனித சங்கிலி போராட்டம் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு .
போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய விடியா திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாகவும் அதனை தடுக்க தவறிய விடியா திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர்   சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சி அலுவலகம் முன்பு நகரசெயலாளர் ஆர்.ஜி.குமார் தலைமையில் கழக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் , மாவட்ட அம்மா பேரவை செயலாளார் பொன்வாசிகிராம் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட  அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் 100க்கும் மேற்பட்டோர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு விடிய திமுக அரசே கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் .
Previous Post Next Post