திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ 23 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார் .

வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு  ரூ 23 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார் . 
 திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்  ஒன்றியம்  தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நன்னிலம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ 23 லட்சம் மதிப்பிலான பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் திறந்து வைத்தார் . அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பேசியதாவது மாணவ செல்வங்கள் எட்டி தூரம் செல்ல முடியாது இந்தபகுதியிலேயே படிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்திகொடுத்தோம் . வரும்காலத்தில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திகொடுப்கோம் என்ற உத்திரவாதத்தை கொடுக்கிறேன் என்றார் . விழாவின்போது திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் ,  , வலங்கைமான்   ஒன்றிய பெருந்தலைவர் சங்கர் , உள்ளிட்ட  அரசு அதிகாரிகள் மற்றும் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .

Previous Post Next Post