*விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் செயல்படாத அதிகாரிகளுக்கு எனது வணக்கம் என்றும் அதிகாரிகளுக்கு ஊக்க மருந்து கொடுக்க வேண்டும் என்றும் உரையை தொடங்கிய விவசாயி - அதிர்ந்து போன அதிகாரிகள்.*
தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டமானது நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.
தொடர்ந்து, ஏராளமான விவசாயிகள் காட்டுபன்றி, யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் பெரியளவில் பாதிக்கப்படுவதாகவும், காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்
அரிசி கொள்முதல் விலையை திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்கி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்