திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் மாதிரி சந்தை அமைத்து வியாபாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தார். அனௌவரையும் பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி வரவேற்றார். மாணவர்கள் பெரும் கல்வி அறிவை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் விதமாக பொருளாதாரம், வணிகம், வியாபாரம், பொருளீட்டுதல், வரவு -செலவு பார்த்தால் போன்ற விஷயங்களை பெரும் விதமாக இன்றைய சந்தை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் செயல் திட்ட அடிப்படையில் நடைபெற்ற இந்த சந்தையில் மாணவர்கள் தங்கள் வீட்டில் பயிர் செய்யும் காய்கறிகளையும் பொருட்களையும் கொண்டு இன்றைய சந்தையை அமைத்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விற்பனை செய்தனர் அதனை பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் வாங்கி சென்றனர். விற்பனை செய்த காய்கறி பொருட்கள் மிகவும் தரமானதாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. மாணவர்கள் சிறந்த முறையில் வியாபாரம் செய்து கணக்கு வழக்குகளை பார்த்த நிகழ்ச்சியை நேரில் கண்ட பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியை பட்டதாரி ஆசிரியர் முரளி அவர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார் மற்றும் ஆசிரியர்கள் ஜெகராஜ், ஆனந்தி, விமலி, ரூபிணி, பத்மப்ரியா ஆகியோர் மாணவர்களின் செயல் திட்டத்திற்கு உதவியாக இருந்தனர்.