திருச்செந்தூர் முருகனை தரிசிக்க உசிலம்பட்டி பகுதி வழியாக 150 க்கு மேற்பட்ட முருக பக்தர்கள் மிதிவண்டியில் யாத்திரை பயணம் மேற்கொண்டனர்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.,
இந்நிலையில் தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் மாலை அணிந்து மிதிவண்டியில் யாத்திரை பயணம் செல்கின்றனர்.,இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி வழியாக பயணம் செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் செல்வது வழக்கம் இந்தாண்டு 34 வது ஆண்டு பயணம் செல்கின்றனர்.,
மேலும் இப்பகுதியில் பெரும்பாலும் முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் உள்ள முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதை யாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.,
பேட்டி: கண்ணன் ( முருக பக்தர்)

