இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள தாயனூர் கிளைகளின் சார்பில் 18.01.2026 இன்று மாலை 3.00 மணி அளவில் தாயனூர் செயலாளர் தோழியர் S.லெட்சுமிபிரபா துணைச் செயலாளர் தோழியர் மங்கையர்கரசி ஆகியோர் தலைமையில் இலக்கிய பேராசான் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 63 வது நினைவு தினமும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டியும் நடைபெற்றது. இதில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் கோல போட்டிகள், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், சிறுவர் மற்றும் பெரியவர் கோலப்போட்டிகள், மியூசிக் சேர் போட்டி ,பெண்கள் மியூசிக் போட்டி, நடனம் ஆடும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R .முருகன் அவர்கள் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டியினை கொடி அசைத்து துவக்கி வைத்து அனைவருக்கும் பரிசளித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மணிகண்டம் ஒன்றிய துணை செயலாளர் தோழர் K.மேகராஜ் மாநகர் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர்M. ரஜியாபேகம் இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் தோழியர் A. இன்னசென்ட் விமலா மேரி இளைஞர் மன்ற முன்னாள் ஒன்றிய செயலாளர் தோழர் R.பீர் முஹம்மது தரைக்கடை சங்க ஒன்றிய துணைத் தலைவர் தோழியர் K. தனலெட்சுமி மற்றும் தாயனூர் லெட்சுமிபிரபா ,மாரியாயி, மங்கையர்க்கரசி, அருணாதேவி, வின்மதி, ஆகியோர்கள் விளையாட்டுப் போட்டிகளுக்கு பரிசளிக்கப்பட்டு நிகழ்ச்சியில் குழந்தைகள் மாணவ மாணவிகள் பெண்கள் ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு இறுதியாக தோழியர் மாரியாயி நன்றி கூறினார்.
இலக்கிய பேராசான் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 63 வது நினைவு தினமும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டியும் நடைபெற்றது
தமிழர் களம் மாத இதழ்
0