இசிஐ பாதிரியாரின் காம லீலைகளும், ஏமாற்று வேலைகளும்
நடவடிக்கை எடுக்குமா? கிறிஸ்தவ நிறுவனம்
ஆற்காடு பைபாஸ் சாலையில் தினமும் ஒருவர் காலையிலும் மாலையிலும் ஒரு பெண்ணை அழைத்து வந்து பஸ் ஏற்றி விடுவார் பைபாஸ் சாலை மற்றும் ட்ரிபிள் எஸ் கல்லூரி அருகில் காலையிலும் இரவு நேரங்களிலும் லாரிகள் வரிசையாக நின்றுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் அந்த பகுதியில் மூன்றாம் பாலினத்தைச் சார்ந்தவர்கள் சுற்றித் திரிவார்கள் இவர் அந்த இடத்திற்கு சென்று மூன்றாம் பாலினத்தவரோடுஅஜால் குஜால் வேலை செய்து ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகுதான் செல்வரா ம் இதனை நோட்டம் பார்த்த அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தகவல் தெரிவிக்க
யார்? இவர் எந்த ஊரைச் சார்ந்தவர் என்று சற்று இவரைக் குறித்து அலசிய போது இவர் பெயர் தேவ ஆசீர்வாதம் என்றும் ராணிப்பேட்டை நாவல்பூர் தனலட்சுமி ஹோட்டல் அருகே உள்ள போஸ்ட் ஆபீஸ் தெருவில் குடியிருந்து வருகிறார் மேலும் இவர் பன்னியூர் அடுத்த மகானிப்பட்டு கிராமத்தில் ஊழியம் செய்து வருவதாக தெரிந்தது
அந்த கிராமத்தில் உள்ள விசுவாசிகளிடம் விசாரித்தோம் அப்பொழுது அவர்கள் கொஞ்சம் கேரக்டர் சரியில்லாத ஆளுதான் இவரைப் பற்றி முழுமையாக தெரிய வேண்டுமானால் இவர் ஏற்கனவே ஊழியம் செய்து வந்த திருவலம் மற்றும் கடப்பேரி கிராமத்தில் விசாரித்துப் பாருங்கள் என்றனர் அதன்படியே திருவலம் மற்றும் கடப்பேரி கிராம திருச்சபை மக்களிடம் விசாரித்தோம்
பெயர் சொல்ல விரும்பாதவர்கள் பல அரிய தகவல்களை அள்ளித் தந்தார்கள்
இவரின் சொந்த ஊர் அரக்கோணம் சாலையை அடுத்த சித்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் என்று பேசத் தொடங்கினர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர் படித்து முடித்து ஊர்ல வெட்டியா! சுற்றிக் கொண்டிருந்ததால இவரின் மூத்த அண்ணன் அரக்கோணத்தில் இ சி ஐ திருச்சபையில் பாதிரியாராக இருந்த போதகர் ஒருவரிடம் தன் தம்பியை பற்றி சொல்லி அவரின் சிபாரிசின் பேரில் பெங்களூர் பட்டணத்திற்கு படக்காட்சி ஊழியம் செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டார் அங்கு ஊழியத்திற்குச் சென்ற இவர் டீம் லீடராக இருந்தவரிடம் வாக்குவாதம் செய்து சண்டை போட்டு இருக்கிறார் அதனால சென்னை இறையியல் கல்லூரில் படிப்பதற்கு இவரை தாமதமாக அனுப்பியுள்ளனர்
இறையியல் கல்லூரிக்கு வந்ததும் இவரின் அட்டகாசம் தொடங்கியுள்ளது
கல்லூரி மாணவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு சமையல்காரர்களிடம் சாப்பாடு சரியில்லை என்று வேண்டுமென்று சண்டை வலிப்பது, மாணவர்களை ஒருவருக்கொருவரை தூண்டிவிட்டு சண்டை போட வைப்பது, கல்லூரி ஆசிரியர்களுக்கு விரோதமாக
செயல்பட்டு சாதி சண்டையை கிளப்பி விடுவது இப்படி பல வேலைகளை செய்திருக்கிறார்
ஒரு வழியா கல்லூரி படிப்பை முடித்தவர் சென்னை பேராயத்தின் மூலமாக கரூர் மாவட்டத்தில் ஊழியம் செய்வதற்கு அனுப்பி வைத்துள்ளனர் அங்கு இவரின் காம லீலைகள் தொடங்கியிருக்கிறது பெண்களிடம் நயவஞ்சகமாக பேசி ஆசை வார்த்தைகளை கூறி காதல் வசப்படுதிருக்கிறார் அப்படி மாட்டிக் கொண்டவர் தான் அவருடைய மனைவி ஸ்டெல்லா
ஸ்டெல்லாவிடம் காதல் ஆசையை காட்டி கடமையை முடித்துக்கொண்டு கழட்டி விட நினைக்கும் போது ஸ்டெல்லாவின் உறவினர்கள் இவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள் திருமணமும் செய்து வைத்திருக்கிறார்கள்
அங்கிருந்து இவர் இட மாற்றம் பெற்று காஞ்சிபுரம் ஏரியாவிற்கு வந்துள்ளார் அப்பொழுது ஏரியா இயக்குனராக ஆத்தர் ஜான் பென்னி என்பவர் செயல்பட்டு வந்துள்ளார் அவருக்கு ஒத்துழைப்பு தருவதே கிடையாதம் எதற்கெடுத்தாலும் கலக்கம்,வாக்குவாதம், சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார் இவரின் அட்டகாசம் தொடர் கதையாக இருந்ததால ஏரியா இயக்குனர் ஆத்தர் ஜான் பெண்ணி இவரை காவேரி பார்க்ம் ஏரியாவிற்கு மாற்றியுள்ளார்
காவேரிப்பாக்கம் ஏரியாவில் மோரணம் திருச்சபையில் போதகராக பணியாற்றிய போது சபைக்கு வரும் பெண்களிடம் இரட்டை மொழியில் பேசுவது வழக்கமாகக் கொண்டுள்ளார், நீ ஓட்ட வடை, நீ யொரு உளுத்தம் வடை
என்றெல்லாம் பேசி இருக்கிறார்
இதனால் கோபமான சபை மக்கள் இவரை இடமாற்றம் செய்ய
கேட்டுக் கொண்டதால திருவலம் திருச்சபைக்கு இடமாற்றம் செய்துள்ளனர் அப்பொழுது ஏரியா இயக்குனராக ஆஸ்டீன் டேனியல்
செயல்பட்டு வந்துள்ளார் ஏரியா காசாலராக இருந்த
தேவப்பிரியம் பணி ஓய்வு பெற்றதால் அந்தப் பதவிக்கு தேவ ஆசீர்வாதத்தை ஏரியா காசாளராக நியமனம் செய்துள்ளனர் பதவி ஆசையும், பண ஆசையும் ஒன்று சேர காமலீலைகளின் கதாநாயகனாக உலா வந்திருக்கிறார் தேவ ஆசிர்வாதம்
ஏரியா நிதியிலிருந்து எப்படி எல்லாம் பணத்தை கையாடல் பண்ண முடியுமோ! அத்தனை யூகங்களை பயன்படுத்தியிருக்கிறார்
பூட்டுத்தாக்கில் இடம் வாங்க வைத்திருந்த சுமார் ஒரு லட்சம், சபை காணிக்கை மற்றும் விசுவாசிகளிடமிருந்து தனிப்பட்ட முறையில் வாங்கின பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார் அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அருகேயுள்ள பாலுசெட்டி, தாமல் பகுதியில் லீலாவதி என்ற ஏழை பெண்ணிற்க்கு படிப்பதற்கு பண உதவி செய்து வந்திருக்கிறார் இந்தப் பெண்ணை தன்னுடைய வளர்ப்பு மகள் என்று சொல்லி உலகத்தை நம்ப வைத்து அடிக்கடி வீட்டுக்கு வர வைத்து தகுதியில்லாத விதமா நடந்து கொண்டதாக விசுவாசிகளின் கண்ணோட்டத்திற்கு வர இவரின் தரமற்ற போக்கை கண்டித்து போற்கொடி தூக்கி இருக்காங்க
இவருடைய சுபாவத்தை பற்றி சொல்லும் போது தேவையிலிருக்கும் ஆட்களை குறிவைத்து உதவி செய்வதாக வஞ்சகமாக பேசி வசப்படுத்துவதில் வல்லவன் என்கிறார்கள் பெண்களாய் இருந்தால் படுக்கை அறைக்கே அழைப்பாராம்
திருவலத்தில் திருச்சபை மக்களின் எதிர்ப்புகள் அதிகமானதால் அங்கிருந்து அதே ஏரியாவில் உள்ள கடப்பேரி திருச்சபைக்கு பணி மாற்றம் செய்துள்ளனர் அந்த திருச்சபைக்கு இவர் போன நேரம் பாலாற்றில் மணல் எடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது மணல் ஏற்றி செல்லும் லாரிகள் ஆலயம் வழியாக செல்வதால் சபைக்கு காணிக்கை கொடுத்து வந்துள்ளனர் சபைக்கு ஏகபோகமாக வருமானமும் வந்துள்ளது சபை போதகராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆசீர்வாதம் வாடகைவீட்டிற்கு அட்வான்ஸ் கட்ட ரூபாய் 15,000 கேட்டிருக்கிறார் சபை கமிட்டியில் உள்ளவர்கள் பணம் தர மறுத்திருக்கிறார்கள் இதனால கோபமான ஆசிர்வாதம் திருச்சபை மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இந்த விஷயம் ஏரியா சேர்மன் ஆஸ்டின் டேனியலுக்கு செல்ல அசிஸ்டின் டேனியல் திருச்சபை பணத்தை போதகர்கள் தனி செலவினங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக கூறி கண்டித்துள்ளார் இதனால் ஏரியா இயக்குனர் மீது இவருக்கு வெறுப்பும், கோபமும் ஏற்பட்டுள்ளது
திருச்சபையில் போதிக்கும் போது தாறுமாறாக பிரசங்கம் செய்திருக்கிறார் சபையில் சிலரின் பலவீனங்களை கண்டறிந்த இவர் ஒரு பெண்ணுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் எந்த புருஷனை கணக்கில் எடுத்துக் கொள்வது என்று பிரசாங்கம் செய்திருக்கிறார்
இதனால் கொந்தளித்த சிலர் இவரை தனி அறையில் தள்ளி தரும அடி கொடுத்திருக்கிறார்கள் மேலும் ஏரியா இயக்குனர் இவரிடம் ஏரியாவின் கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரிக்க கேட்டுக் கொண்டதால் ஆசிர்வாதம் இவருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்து தன்னை சாதி பெயரை சொல்லித் திட்டினார் என்றும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று கொச்சைப்படுத்தினார்
என்று பொய்யான வதந்தியை பரப்பி விட்டு சாதி அடிப்படையில் போதகர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்
ராணிப்பேட்டையிலிருந்து அடியாட்களை வரவழைத்து ஏரியா இயக்குனரை தாக்க முயற்சி செய்துள்ளார் இந்த சம்பவத்தால் மிகப்பெரிய பரப்பரப்பு ஏற்பட்டதா சொல்றாங்க
ஆஸ்டின் டேனியலுக்கு பிறகு
சாத்ராக் என்பவர் காவேரிப்பாக்கம் ஏரியா இயக்குனராக பொறுப்பேற்றிருக்கிறார் இவர் ஆசிர்வாதத்துடன் இறையியல் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்கிறார்கள் ஆசிர்வாதம் சாத்ராக்கின் பலவீனத்தை நன்கு அறிந்தவர் சாப்பாடு போட்டு வசப்படுத்தி இருக்கிறார் சாத்தராக்கும் நம்ம தம்பி தானே நமக்கு என்ன? துரோகமா? செய்ய போறான் என்று நம்பியிருக்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏரியா நிதியிலிருந்தும் கிராம போதகர்கள் சம்பளத்திலிருந்து
ஆயிர கணக்கில் கொள்ளையடித்திருக்கிறார்
இது ஒருபுறம் இருக்க கடப்பேரி சபை மக்கள் ஆசிர்வாதத்தை இடமாற்றம் செய்ய கேட்டுக் கொண்டதால் காவேரிப்பாக்கம் ஏரியாவில்
பன்னியூர் திருச்சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
பன்னியூர் சபையில் இவர் பணியாற்றிய போது நேரத்திற்கு சென்று சபையை நடத்துவதில்லை, ஊழிய காரியங்கள் சரிவர கவனிப்பதில்லை என்று சபை மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
ஏன் இவரால் ஊழியத்திற்கு சரியாக செல்ல முடியவில்லை காரணம் சொன்னபோது
வாலாஜா வன்னி வேடு மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி விஜயாவின் வீட்டிற்குச் அடிக்கடி சென்று நயவஞ்சகமா பேசி ஐந்து பவுன் நகை,கணிசமான தொகையை ஏமாற்றியுள்ளார் அவருடைய மகன் தீன தயாளனை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கி
மயக்கத்திலே தன்னுடன் வைத்திருந்ததாக விஜயாவின் குற்றச்சாட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் சொல்றாங்க இது சம்பந்தமா வாலாஜா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் விஜயா
விசாரணை அடிப்படையில் ஆசிர்வாதம் கைது செய்யப்பட்டுள்ளார் நாட்கள் செல்ல தனது அண்ணன் மகனை வளர்ப்பு மகன் என்று சொல்லி பன்னியூர் சபைக்கு அடிக்கடி அழைத்து சென்று வந்துள்ளார் விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா? முளைக்கும் என்ற கதையா? அண்ணன் மகன் சபைக்கு வந்த பெண்ணை காதல் வசப்படுத்தி அழைத்து சென்றுள்ளார் இதனால் சபை மற்றும் ஊர் மக்களின் எதிர்ப்பு இவருக்கு விரோதமாய் வளுத்தது ஏரியாவில் உள்ள எல்லா சபைக்கும் போய் வந்து விட்டார் எந்த சபைக்கு போனாலும் ஒரு வருடம், இரண்டு வருடம்தான் இருப்பார் இவரை இடமாற்றம் செய்ய இடமில்லை என்பதால் ராணிப்பேட்டை அருகே உள்ள மாணிக்கநகர் என்ற கிராமத்தை தேர்ந்தெடுத்து ஊழியம் செய்து வந்துள்ளார் இந்த வருடம் மீண்டும்இவருக்கு ஏரியா காசலராக பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது மகானிப்பட்டில் ஊழியம் செய்து வருகிறார் தற்போதுள்ள ஏரியா சேர்மனுக்கும் தொல்லைகள் ஆரம்பித்திருக்க வேண்டும் என்கிறார்கள்
இசிஐ பேராயர் எஸ்றா சற்குணம் கலைஞருடன் நட்பு கொண்டிருந்தவர் ஆன்மீகவாதி ஆயிரக்கணக்கான சபைகளை கட்டி வளர்ச்சியின் பாதையிலே அழைத்து சென்றவர் சமூக நீதியை கொள்கையாகக் கொண்டவர், தாயுள்ளம் கொண்டவர் ,ஏழை மக்களுக்கு உதவி செய்யக் கூடியவர் அரசியல் மேடைகளிலும் ஆன்மீகத்தை பேசக்கூடியவர் இவரின் கிறிஸ்துவ நிறுவனத்தில் காம லீலைகளும் ,ஏமாற்று வேலைகளும்,கோயில் பணத்தை கொள்ளை அடித்து பேராயர் பேருக்கும்,கிறிஸ்தவ கடவுளுக்கும் களங்கம் விளைவித்து வரும் பாதிரியார் ஆசிர்வாதத்தின் தில்லாலங்கடி வேலையை கிறிஸ்தவ நிறுவனத்திற்கும்,காவல்துறைக்கும் தெரியுமோ? தெரியாதோ? இதோ! நாங்கள் தெரியப்படுத்துகிறோம்.இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சபை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது.