தூத்துக்குடியில் பத்திரிக்கையாளரை வழிமறித்து ஆயுதங்களால் தாங்கி வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் - சாலையில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாட முடியாத பாதுகாப்பற்ற சூழலில் தூத்துக்குடி உள்ளதா?
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் கடந்த 31.3.23 அன்று இரவு சுமார் 11 மணி அளவில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த பத்திரிக்கையாளர் ஒருவரை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் வழிமறித்து கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் பத்திரிக்கையாளர்கள், பாமர பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் செல்ல முடியாமல், அச்ச உணர்வுடனே பயணிக்க வேண்டிய அசாதரண சூழல் தான் தூத்துக்குடியில் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு என்பது தூத்துக்குடியில் கேள்வி குறியாகி உள்ளதா என்பது போன்ற சந்தேகங்களும், கேள்விகளும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கஞ்சா மற்றும் மிதமிஞ்சிய போதை ஆசாமிகள், பொது இடங்களில் இது போன்று பொதுமக்களை சர்வசாதாரணமாக அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும் போது, அவர்கள் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாததே, இது போன்ற குற்றச்செயல்கள் தொடர்வதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.