உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.!!
மார்ச்: 4
ஆவணம்; 2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல ஆண்டுகளாக இறைச்சி கடைகளிலும் மீன் கடைகளிலும் கெட்டுப்போன மற்றும் ரசாயனம் தடவிய பொருள்களை விற்பது விற்பனை செய்வது வாடிக்கையாகவே உள்ளது இதுகுறித்து பாமர மக்களிடம் விழிப்புணர்வு போதிய அளவு இல்லை என்பது நிதர்சனமான உண்மை இது குறித்து விழிப்புணர்வு மற்றும் புகார் தெரிவிக்கும் வகையில் மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடை மற்றும் உணவகங்களில் புகார் தெரிவிக்க கடைகளின் முன் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் போன்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் புகார் எண்களை எழுதி போர்டில் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றனர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா??