மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு கொடை ரோடு பகுதியில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி பயின்று வருகின்றனர்.

மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு கொடை ரோடு பகுதியில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி பயின்று வருகின்றனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை தாலுகாவில் கிராமங்களுக்கு சென்று பயிர் நோய்களை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கி வருகின்றனர். இவர்களுள் ஒருவரான     கண்ணன் என்ற மாணவர் கந்தப்பகோட்டை கிராமத்தில் திரு. செல்வம் என்பவரின் தென்னந்தோப்பில் இளங்காய்கள் உதிர்தல் மற்றும் உற்பத்தி குறைபாடு இருந்ததால் அதற்கு டி.என்.ஏ. யு . தென்னை டானிக்கை செயல் விளக்கம் செய்து காட்டினார். மேலும் இந்த டானிக்கை பயன்படுத்துதல் மூலம் பச்சையம் அதிகரிக்கும்
ஒளிச்சேர்க்கை திறன் கூடும், பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், குரும்பை கொட்டுதல் குறையும், காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும் , விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும் , பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
பயன்படுத்தும் முறை :
ஒரு வருடத்திற்கு இரண்டு பாக்கெட் (200 மி.லி.) டானிக்கை 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.
Previous Post Next Post