மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு கொடை ரோடு பகுதியில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி பயின்று வருகின்றனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் கிராமங்களுக்கு சென்று பயிர் நோய்களை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கி வருகின்றனர். இவர்களுள் ஒருவரான கண்ணன் என்ற மாணவர் விலாம்பட்டி கிராமத்தில் அர்கா ஹெர்பிவாஷ் என்னும் ஒரு இயற்கையாய் தயாரிக்கப்பட்ட இந்த பொடியை பற்றிய செயல்முறை விளக்கத்தை செய்து காட்டியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் பூச்சிகொல்லி , களைகொல்லி , மற்றும் பல இரசாயன மருந்துகளை பயன் பயன்படுதுதல் மூலம் நம்முடைய உடலுக்கு தீங்கு ஏற்படுகின்றது . அதனை காய் , பழலைங்களில் இருந்து அகற்ற இந்த பொடி உதவுகிறது . இது ICAR -IIHR பெங்களூரின் புதுமையான தயாரிப்பு ஆகும். இதில் இரசாயன பொருள்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை மற்றும் 100% பாதுகாப்பானது . இந்த தயாரிப்பானது தாவரங்களில் இருந்து பெறப்பட்ட ஒரு தூள் ஆகும். இது ஒரு எளிய முற்றும் முற்றிலும் பாதுகாப்பான மூலிகை தயாரிப்பு ஆகும், இது பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து பூச்சிகளின் மேற்பரப்பு எச்சங்களை ஓடும் நீரில் கழுவுவதன் மூலம் அகற்றுகிறது. இது 30 வினாடிகளில் 99% கிருமிகளை நீக்குகிறது.
பயன்படுத்தும் முறை:
1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் அல்லது ½ தேக்கரண்டி கலந்து நன்கு கிளறவும்.பழங்கள் மற்றும் காய்கறிகளை கைகளால் 30 விநாடிகள் மேன்மையான முறையில் கழுவவும்.மீண்டும் சாதாரண நீரில் கழுவவும். 1 கிலோ பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுவதற்கு 1 லட்டர் தண்ணீர் போதுமானது என்ற செயல்முறை விளக்கத்தையும் கூறினார்.