மன்னார்குடி அருகே கடந்த 30 ஆண்டு காலமாக கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டினை கொழுத்தி ஒருதரப்பினர் அராஜகம்…

மன்னார்குடி அருகே கடந்த 30 ஆண்டு காலமாக கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டினை கொழுத்தி ஒருதரப்பினர் அராஜகம்…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கண்ணாரபேட்டை கிராமத்தில் தெட்சிணாமூர்த்தி-கற்பகவள்ளி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது மகன் சந்திரசேகர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். மேலும் சந்திரசேகர் மனைவி சரிதா, இவரது மகள்கள் அனுஷ்கா, தேசிகா ஆகியோர் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். கண்ணாரபேட்டை கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கிராம மக்களிடம் வரி வசூல்செய்து வருவது வழக்கம். மேலும் கிராம குளத்தில் பிடிக்கும் மீன்களை கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் தெட்சிணாமூர்த்தி குடும்பத்தினரை புறக்கணித்து அக்குடும்பத்தினருக்கு மீன்கள் வழங்காமலும் அக்குடும்பத்தினரை வேண்டுமென்றே அவமதிக்கு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்திருந்த தெட்சிணாமூர்த்தி கிராமத்திற்கு வரி செலுத்தாமல் இருந்து வந்துள்ள நிலையில் கிராம கமிட்டியினர் கடந்த 30 ஆண்டுகாலமாக தெட்சிணாமூர்த்தி குடும்பத்தை கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்துள்ளதாக கூறபடுகிறது. இத்தகைய சூழலில் தெட்சிணாமூர்த்தி வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துவந்துள்ளனர். இந்நிலையில் இன்று தெட்சிணாமூர்த்தி மகன் சந்திரசேகரன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றநிலையில், இன்று மதியம் வீட்டின் கூரையில் தீடிரென தீப்பிடித்து எரித்துள்ளது. தகவல் அறிந்து வந்த மன்னார்குடி தீயணைப்பு துறையினர் தீயை அனைக்க கடுமையாக போராடிய போதிலும் தீ வீடு முழுவதும் மலமலவென பரவிவயதால் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டீவி, குளிர்சாதனைபெட்டி, மற்றும் வெள்ளி தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் என ரூ.25 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில்கருகி நாசமாகின குறிப்பாக குழந்தைகளின் பள்ளி படிப்பு சான்றிதழ்கள், வீட்டு பத்திரம், ரேஷன்காட்டு, ஆதார்காட்டு முதலியன கருகின. ஏற்கனவே தெடசிணாமூர்த்தி பக்கத்து வீட்டினர் மீது முன்விரோதம் சம்மந்தமாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில் காவல்துறை அலட்சியமாக இருந்துவந்துள்ள நிலையில் இத்தகைய தீ சம்பவம் நடந்துள்ளதாக மனவேதனை தெரிவித்துள்ள தெட்சிணாமூர்த்தி குடும்பத்தினர், இது சம்மந்தமாக மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்துனர். 30 வருட காலமாக ஒருகுடும்பம் கிராமத்தைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து வருவாய் நிர்வாகத்தினரும், காவல்துறையினர் அலட்சியமாக இருந்துவந்துள்ளதே இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களுக்கு காரணமாக இருந்துவருவதாகவும், உயிரழப்பு ஏற்படுவதற்கு முன்பாக காவல்துறை இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதே பாதிக்கப்பட்டுள்ள தெட்சிணாமூர்த்தி குடும்பம் எதிர்ப்பார்ப்பாக இருந்துவருகிறது.

பேட்டி
1) சந்திரசேகர் பாதிக்கபட்டவர் 
2) தெட்சிணாமூர்த்தி பாதிக்கபட்டவரின் தந்தை
Previous Post Next Post