தேனி மாவட்ட செய்தியாளர் : இரா.இராஜா உத்தமபாளையத்தில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவக்க விழா நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷ நவாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவக்க விழா நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி பயிலும் மாணவ மாணவர்களையும் , பட்டதாரிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கான கல்வி சேவையை வழங்குவதற்காக தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவங்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் தாளாளர் தர்வேஷ் முகையதீன் தலைமையிலும், தேனி மாவட்ட அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் தேனி மாவட்ட உலமா சபையினர் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் கல்வி மறுக்கப்பட்டு இன்னார் இன்னார் தான் படிக்க வேண்டும் ஜாதிக்கொரு வேலை செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றிய தந்தை பெரியாரும், அம்பேத்கரும் பெற்றுத்தந்த உரிமைதான் இன்று உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் 52 சதவீத மாணவர்கள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது தொடக்கக் கல்வியிலிருந்து மாணவர்கள் விரும்பிய துறையில் சாதிப்பதற்கு பெற்றோர்களும் சமுதாயமும் ஊக்குவித்து உறுதுணையாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவையாக உள்ள கல்வி பணியை தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரி சங்கம் செய்ய வேண்டும் எனவும், உத்தமபாளையம் பகுதியில் திறமை மிக்க பட்டதாரிகளை உருவாக்கும் முயற்சியை இந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் சிறப்புரை ஆற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட சுகாதாரத்துறை முன்னாள் இணை இயக்குனர் செய்யது சுல்தான் இப்ராஹிம் பொன்ராஜ் கொந்தாளம், மற்றும் ஜமாத் தலைவர்கள் பட்டதாரி, ஆண்கள் , பெண்கள் , பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஒன்றிய பேரூர் முகாம் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.......

தேனி மாவட்ட செய்தியாளர் : இரா.இராஜா
 



உத்தமபாளையத்தில்  தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவக்க விழா நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷ நவாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

  தேனி மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி பயிலும் மாணவ மாணவர்களையும் , பட்டதாரிகளையும் ஒருங்கிணைத்து  அவர்களுக்கான கல்வி சேவையை வழங்குவதற்காக  தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரிகள் சங்கம் துவங்கப்பட்டுள்ளது.

  உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர்   ஹவுதியா கல்லூரியின் தாளாளர் தர்வேஷ் முகையதீன் தலைமையிலும், தேனி மாவட்ட அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் தேனி மாவட்ட உலமா சபையினர் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்  கலந்து கொண்டு  சிறப்புரை ஆற்றினார்.

அன்றைய காலகட்டத்தில் சமுதாயத்தில் கல்வி மறுக்கப்பட்டு இன்னார் இன்னார் தான் படிக்க வேண்டும் ஜாதிக்கொரு வேலை செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றிய   தந்தை பெரியாரும், அம்பேத்கரும் பெற்றுத்தந்த உரிமைதான் இன்று உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் 52 சதவீத மாணவர்கள் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது 

 தொடக்கக் கல்வியிலிருந்து மாணவர்கள் விரும்பிய துறையில் சாதிப்பதற்கு பெற்றோர்களும் சமுதாயமும் ஊக்குவித்து உறுதுணையாக இருக்க வேண்டும். 

இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவையாக உள்ள கல்வி பணியை  தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் பட்டதாரி சங்கம்  செய்ய வேண்டும் எனவும், உத்தமபாளையம் பகுதியில் திறமை மிக்க  பட்டதாரிகளை உருவாக்கும் முயற்சியை இந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட சுகாதாரத்துறை முன்னாள்  இணை இயக்குனர் செய்யது சுல்தான் இப்ராஹிம் பொன்ராஜ் கொந்தாளம்,  மற்றும் ஜமாத் தலைவர்கள் பட்டதாரி, ஆண்கள் , பெண்கள் , பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ஒன்றிய பேரூர் முகாம் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது....
...
Previous Post Next Post