தமிழக முதல்வர் கவனத்திற்கு செல்லுமா?? தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் அடுத்த அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு சூதாட்டம்
மார்ச்:11
ஆவணம்:2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
நாளை12.03.2023 அன்று அய்யம்பட்டியில் காளைகளில் ஆட்டம் அதிகம் காணப்படுமோ இல்லையோ, இந்த இரண்டு நாட்களாக களம் காண டோக்கன் வாங்குவதில் அனல் பறந்தது டோக்கன் வாங்க வேண்டுமானால் ஆன்லைன் மூலம் காளைகள், உரிமையாளர்கள், மருத்துவச்சான்று போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 700 காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். சுமார் 1500 பதிவுகள் இருந்தால் யாரை தேர்வு செய்வது எப்படி தள்ளுபடி செய்வது என்பதற்காக எழுதப்படாத சட்டங்களை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். தேர்வு செய்த காரணத்தை அவர்களே சொல்லி விடுகிறார்கள், தள்ளுபடிக்கான காரணங்கள் என்னவென்றே தெரியாமல் தவித்து வருகிறார்கள், ஆளும் கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரே நபரிடம் பல பெயர்களில் பல டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதை சன்மானம் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் அரசியல் செல்வாக்கு இல்லாமல் காளைகளை மட்டும் உயிராக நினைத்து வளர்த்து வரும் அப்பாவிகள் தங்கள் காளைகளை களத்தில் இறக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். கால்நடை மருத்துவர்கள் இல்லாமலே, பரிசோதணை செய்யாமல் சான்று வழங்கப்படுகிறது, வருவாய்த் துறையினர் மிரட்டப்படுகிறார்கள் எல்லா உரிமையும் ஆளும் வர்க்கத்திற்கு என்றால் பொதுமக்கள் இங்கே எப்படி கலந்து கொள்ள முடியும்?
எனவே தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொண்டு , அதிகாரமிக்கவர்கள் மட்டுமல்ல பாமரர்களும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என தகுதி வாய்ந்த காளை உரிமையாளர்கள் புலம்பி வருகிறார்கள். தேனி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்....