தே. சிந்தலைச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா!!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, தே. சிந்தலைச்சேரி ஊராட்சி மன்றம் சார்பில் தமிழர் திருநாளம் தை திருநாளை கொண்டாடும் விதத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்று பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசினை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி அவர்கள் வழங்கினார், நிகழ்வில் ஊராட்சி செயலாளர் சிவசங்கர், ஊராட்சி மன்றதுனை தலைவர், வார்டு மெம்பர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.