தேனி மாவட்டம் கம்பம் தனியார் பள்ளியில் சாரணர் இயக்கம் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்.!!
13.01.2023
ஆவணம்; 1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
கம்பம் சென்ட் மேரிஸ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் ஹிந்துஸ்தான் ஸ்கவுட்ஸ் இயக்கம் சார்பில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு வழங்கிய பயிற்சி நிறைவு விழாவாக இன்று சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.
முதல்வர் செல்வி பிரிட்டோ தலைமை தாங்கினார்.
செயலாளர் கலைமதி முன்னிலை வகித்தார்.
இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகுராஜா மாணவ மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் பாதுகாப்பு முகாம் ஏற்பாடு செய்வது குறித்து சிறப்பாக பயிற்சி அளித்தார்.
ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.