தேனி கெங்குவார் பட்டியில் ஒருவர் கொலை போலீஸ் குவிப்பு பதற்றம்.!!

தேனி கெங்குவார் பட்டியில் ஒருவர் கொலை போலீஸ் குவிப்பு பதற்றம்.!!

ஆவணம்: 2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெங்குவார்பட்டி பகுதியில்  செல்வம் மகன் வினோத்குமார் என்பவர் தென்னந்தோப்பில் வினோத் குமார் , வெண்டிமுத்தையா மகன் ஜெகதீஷ்வரன் ,தங்கப்பாண்டி மகன் மனோஜ் குமார் ஆகியோர் தென்னந்தோப்பில் இருந்தபோது அங்கு வந்த கெங்குவார்பட்டி  பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் மூன்று பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் . வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் மூன்று பேரையும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கத்தி அருவாள் உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர் . இதில் சம்பவ இடத்திலேயே ஜெகதீஷ்வரன்  என்பவர் பலியாகியுள்ளார் . மேலும் வினோத் குமார் மனோஜ் குமார் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இருவரையும் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர் . சிகிச்சையில் இருந்த வினோத் குமாரை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் உயிரிழந்த ஜெகதீஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் . மேலும் இது குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் . இதனால் கெங்குவார்பட்டி பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது .இதனை அடுத்து கெங்குவார்பட்டி பகுதியில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே  நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்
Previous Post Next Post