வலங்கைமான் அருகே செல்போன் டவர் காரணமாக கதிர்வீச்சுக்கு உள்ளாகி வருவதாக கிராம மக்கள் வேதனை

 வலங்கைமான் அருகே செல்போன் டவர் காரணமாக கதிர்வீச்சுக்கு உள்ளாகி  வருவதாக  கிராம மக்கள்  வேதனை 

விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகியுள்ள வடக்குபட்டம் பகுதி கிராம மக்கள் உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தினசரி வாழ்க்கை நகர்த்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்காவிற்கு உட்பட்ட வடக்குபட்டம் கிராமத்தில் ஏழை எளிய கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.  இக்கிராமத்தின் நடுவே கடந்த 2008ம் ஆண்டு சட்டத்திற்கு புறம்பாக அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மீறி மிகமிக குறைவான உயரத்தில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த செல்போன் டவர் மூலமாக 4 நிறுவனங்கள் மூலம் கைப்பேசிகளுக்கான நெட்வொர்க் சேவை வழங்கும் வகையில் அதிநவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிநவீன கருவிகள் வாயிலாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர்களுக்கு கதிர்வீச்சால் புற்றுநோய் , உள்ளிட்ட  உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.  குறிப்பாக புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி மரணிக்கும் நிலையில் அவதியுற்று வருகின்றனர்.         மேலும் இத்தகைய செல்போன் டவர் கதிர்வீச்சு காரணமாக குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் மன ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக அக்கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். வடக்கு பட்டம் கிராமத்தை சேர்ந்த மக்கள் செல்போன் டவர் குறித்து எழுப்பும் ஐயம் காரணமாக அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும், வடக்குபட்டம் கிராமத்தில் வசிப்பவர்களின் உறவினர்களும் இப்பகுதிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர். செல்போன் டவரை அப்புறப்படுத்தி வடக்குபட்டம் கிராம மக்களின் அச்சத்தை போக்கிட உடனடியாக தமிழக அரசு முன் வராவிடில் வரும் 4ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
பேட்டி 
1, திலகவதி வடக்கு பட்டம்  வலங்கைமான்
2, சுவாமிநாதன்   வடக்கு பட்டம்  வலங்கைமான்
 3,சின்னதுரை    வடக்கு பட்டம்  வலங்கைமான்
Previous Post Next Post