இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தே.சிந்தலைச்சேரிஊராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு உத்தமபாளையம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தன்னார்வலர்கள், தைத்திருநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சிந்தலைச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தன்னார்வலர்கள் அட்வகேட், சத்தியமூர்த்தி, ஆரோக்கியராஜ் (தலைமை ஆசிரியர்) செல்வகுமார், பசுமை செந்தில், ரஞ்சித்குமார், ரவிக்குமார் Trees Secretary மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி, ஊராட்சி செயலாளர் சிவசங்கர் உட்பட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர், மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தன்னார்வலர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்,
தேனி மாவட்ட செய்தியாளர் MP. ஜீவா