ஜனவரி 15
புதுச்சேரியில் அனைத்து சமூக அமைப்புகள் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் புதுச்சேரி பூர்ண குப்பம் அடுத்த,
புது குப்பம் பகுதியில். அனைத்து சமூக அமைப்புகள் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.சித்தானந்தம் அவர்களின் ஏற்பாட்டில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில்., அனைத்து சமூக உறவுகள் களப்பணியில் விளையாட்டுப் போட்டிகள், கோல போட்டிகள் நடைபெற்று ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டன.,
இந்த சிறப்பான எந்த பேதமையும் இன்றி,
விழாவில் அனைவரும் சமரசத்தோடு கலந்து கொண்டு பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ந்தனர்.
ஒருங்கிணைப்பாளர் திரு. சித்தானந்தம் அவர்கள் கூறுகையில் இது போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நம்முடைய அனைத்து சமூக ஆர்வலர்கள் ஒற்றுமையுடன் பங்களிப்புடன் நடைபெற்றது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது வருகின்ற காலத்தில் மக்களிடத்தில் சமத்துவத்தையும்,
சகோதரத்துவத்தையும்
ஏற்படுத்தவும் பாரம்பரியத்தையும்,
விவசாயத்தையும் இளம் தலைமுறைகளை வளர்த்தெடுக்கவும் அனைவருடைய பங்கு அமைந்திருக்கிறது என்று நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்...
இந்நிகழ்ச்சியில் பெரும்பான்மையான தமிழ் பற்றாளர்கள் மகளிர் மற்றும் இளம் தலைமுறை குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்