தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் ரூபாய் 480000 பணத்தை கையாடல் செய்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது......

தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் ரூபாய் 480000 பணத்தை கையாடல் செய்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது......

ஆவணம்:2
05.01.2023
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா


தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த சீப்பாலக்கோட்டையில் ஊராட்சி மன்ற தலைவி கார்த்திகா தேவி 48 லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பல்வேறு கட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணைகள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இன்றும் விசாரணை நடைபெற்றது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் தலைமையில் இன்று விசாரணை நடைபெற்றது விசாரணைக்கு ஆஜராகும் படி பத்து நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது இதில் ஊராட்சி மன்ற தலைவி கார்த்திகா தேவி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி அவர்கள் மற்றும் மனுதாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் என போக ஒருவர் மட்டும் ஆஜரானார் ஏழு நபர்களில் ஒருவர் மட்டுமே ஆஜரான நிலையில் மீதியும் உள்ள ஆறு நபர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை இதன் அறிக்கையை தயார் செய்து மேல் இடத்திற்கு அனுப்புவதாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். விசாரணையின் முடிவில் தான் ஊராட்சி மன்ற தலைவி கார்த்திகா தேவி அவர்கள் PFMSமூலம் அவர்களின் உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என இவர்களின் பெயர்களில் 48 லட்சம் ரூபாயை பல்வேறு பணிகள் செய்ததாக பொய்யான கணக்கு காண்பித்து பணத்தை கையாடல் செய்ததாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி அவர்கள் ஊர் பொதுமக்களின் சார்பாக 48 லட்சம் ரூபாய் எடுத்து எந்த விதமான பணிகள் செய்தீர்கள் ஆதாரம் என்ன ஊரின் வளர்ச்சி பணிகள் என்னென்ன செய்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பிய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த காரணத்தினால் அப்போது கூட்டத்தில் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து சுருளி அவர்கள் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கையின் இறுதியில் தான் கார்த்திகா தேவி அவர்கள் பணம் கையாடல் செய்துள்ளாரா? இதற்கு யார் யார் உதவினார்கள் என இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும் மாவட்ட நிர்வாகம் இதன் உண்மை தன்மையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் என நம்புகிறோம்.
Previous Post Next Post