ஆண்டிபட்டி வைகை அணையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற 10 கண்மாய்களுக்கான மீன் வளர்க்கும் குத்தகை உரிமம் ஏலத்தின் போது இரு தரப்பினரடி அடிதடி மறு தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைப்பு

ஆண்டிபட்டி வைகை அணையில்  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை  உதவி இயக்குனர்   அலுவலகத்தில் நடைபெற்ற 10 கண்மாய்களுக்கான மீன் வளர்க்கும் குத்தகை உரிமம்  ஏலத்தின் போது இரு தரப்பினரடி அடிதடி 
மறு தேதி குறிப்பிடாமல் ஏலம்  ஒத்திவைப்பு 



தேனி மாவட்டம் ஆண்டிபட்டி  அருகே உள்ள வைகை அணையில்  உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம்  கட்டுப்பாட்டில் பெரியகுளம் பகுதியில் உள்ள குளங்களான குள்ளப்புரம் சிறுகுளம் கண்மாய்,கீழ வடகரை பட்டத்திக்குளம் ,பெரியகுளம் வடகரை கடம்பன் குளம் , சின்ன பூலாங்குளம் , வேலன் குளம் ,  ஜெயமங்களம் புதுக்குளம் ,தென்கரை பாப்பையன்பட்டி குளம் ,வடவீரநாயக்கன்பட்டி பூவாலசேரி கண்மாய் ,மேல்மங்கலம் நெடுங்குளம் கண்மாய் ,தாமரைக் குளம் கண்மாய் ஆகிய 10 கண்மாய்களில் மீன் வளர்ப்பும் குத்தகை உரிமம் ஏலம் இன்று 5.1. 2023-ம் தேதி  வைகை அணை பகுதியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும் என கடந்த  மாதம் தகவல் தெரிவிக்கப்பட்டது .இந்நிலையில் இன்று கண்மாய்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச குத்தகை தொகைக்கான வங்கி வரைவோலையை ஏராளமான ஏலதாரர்கள்  நேரில் வழங்கினார்கள் 
.மேலும் 10 கண்மாய்களுக்கான  ஏலம் உரிமம் விண்ணப்பம்   800 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏலதாரர்கள் வாங்கிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏலம் எடுக்க சுமார் 750க்கும் மேற்பட்டோர் வங்கி வரைவோலையுடன் வந்திருந்த நிலையில் ஏல நிபந்தனைகளின் படி 12 மணிக்குள் வரைவோலை மீன் வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலையில் பகல்

 12 மணிக்கு மேல் பலரும் வரைவோலை கொண்டு வந்திருந்தனர். இதனால் 12 மணிக்கு மேல் வரும் நபர்களிடம் வங்கி வரைவோலை பெறக் கூடாது என்று கூறி பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 10 கண்மாய்களுக்கான ஏலம் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் குவிந்து இருந்தனர். முன்னதாக பாதுகாப்பு பணிகள் வைகை அணை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது 10 கண்மாய்களுக்கான ஏலம் நடைபெற்ற போது அங்கு வந்த கடந்த ஆண்டுகளில் கண்மாய்களை ஏலம் எடுத்து மீன் வளர்த்து வரும் நபர்கள் கடந்த சில மாதங்கள் பெய்த கனமழையால் மீன் பிடிக்க முடியாமல் போய்விட்டது ஆகவே இந்த முறை  குளத்தை ஏலம் விடாமல் தங்களுக்கு தற்போது விட்டுத் தரும்படி கேட்டு ஏலம் எடுக்க வந்தவர்களிடையே அடிதடி ஏற்பட்டது .இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .சட்ட ஒழுங்கு சீர்கேடு காரணமாக மறு தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார் .
Previous Post Next Post