சிதம்பரத்தில் ஒரு கல்லூரி மாணவன் பள்ளி மாணவிக்கு பேருந்து நிறுத்தத்தில் தாலி கட்டிய வீடியோ ஒன்றை சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான கோவிலாம் பூண்டி பொ.பாலாஜி கணேஷ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் அது சமூக வலைதளங்களில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வைரலாக்கியது பலரின் கவனத்தையும் கண்டனத்தையும் பெற்றது பெற்றோர்களை தண்டிக்க வேண்டும் தவறு செய்யும் பள்ளி மாணவ மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலவிதமான கோரிக்கைகள் எழுந்துள்ளது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒழுக்கமின்மை போக்கு அதிகரித்துவிட்டது இதை சுட்டிக்காட்டி பொதுமக்கள் பலரும் தமிழக அரசு ஒழுக்க நெறிமுறைகளை கற்றுத் தர வேண்டும் இப்படி தருவதாக செய்யும் மாணவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.