ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி உள்ள கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் திரு என் பழனிச்சாமி அவர்கள் ராஜினாமா செய்துள்ளதால் மற்றும் பொது குழு செயற்குழு உறுப்பினர்கள் வயது முதிர்வு காரணமாக எவரும் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளதாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தற்பொழுது செயல்பாடு இன்றி உள்ளது
இதுகுறித்து புஞ்சைப் புளியம்பட்டி நகர பாரதிய ஜனதா சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நகரக் தலைவர் சி தங்கமணி அவர்கள் தலைமையில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் மூலமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்து செயல்பட்டு வருகிறது அது தற்போது ஒரு சார்பாக உள்ளது என்பதை வலியுறுத்தியும் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் முன்னாள் மாணவர் அமைப்பு மற்றும் கல்வியாளர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மறு கட்டமைப்பு செய்யப்பட வேண்டும் என்று ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் நகர பாரதிய ஜனதா சார்பில் கோரிக்கை மனுவை பள்ளி தலைமை ஆசிரியரிடம் அளிக்கப்பட்டுள்ளது இது குறித்து மேற்காண நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியரின் முதன்மை கல்வி அலுவலரின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் இக்கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் கோரிக்கையாக வைக்கின்றனர்.