மதுரையில் பள்ளி மாணவர்களிடம் தகராறில் மாணவர் கண் பாதிப்பு

மதுரையில் பள்ளி மாணவர்களிடம் தகராறில் மாணவர் கண் பாதிப்பு

மதுரை சுந்தராஜபுரம் பகுதி யில் இயங்கி வரும் மதுரை மாநக ராட்சி மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 12 ம் தேதி புதனன்று இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி சார்பில் நடைபெற்றது.  இதில் ஆணையாளர், மேயர்,  துணை மேயர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் தலைவருமான ஜே. ரவிவர்மா என்பவர் மகன் ஜாஸ்வா என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவருக்கும் அவருடன் படிக்கும் சாயிராம் என்ற மாணவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்  ஜாஸ்வா என்ற மாணவன் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த மாணவனுடைய இடது கண்ணில்  இருந்து இரத்தம் வழிந்தது. இதனால் இடது கண் பார்வை தெரியவில்லை. இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்து வந்ததை தொடர்ந்து பள்ளிக்குச் சென்று பார்த்த மாணவனின் தந்தை ரவிவர்மா உடனடியாக மகனை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவனை பரி சோதனை செய்த மருத்துவர்கள் கண்ணிற்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறினர். இதனால்  மாணவனின் கண் பார்வை பறிபோய் விடுமோ என்ற வேதனையில் தந்தை ரவிவர்மா, மாணவர்களின் சண்டையை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தினர் மீதும் தாக்கிய மாணவன் மீதும் சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புகார் அளித்துள்ளார்.
Previous Post Next Post