மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் மழையினால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்டம்

மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் 
மழையினால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்டம்



ராணிபேட்டை மாவட்டம்
22.06.22

கடந்த  இரண்டு நாட்களாக காற்றுடன் பெய்து வந்த  தொடர் மழையால் மேல்விஷாரம்
 புதுப்பேட்டை 3வது தெருவில் வசித்து வரும் சையது உசேன் மற்றும் சல்மா பானு ஆகிய இரு குடும்பங்களை சேர்ந்தவர்களின் வீடுகளின் மீது மரங்கள் விழுந்ததில்  வீடு மற்றும் பொருட்கள் சேதமடைந்தது 

இதனால்
 வாழ்வாதாரத்தை இழந்து நின்ற  இவர்களுக்கு     6 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தையும் உள்ளனர் இவர்களின் நிலைமையை அறிந்த
 தி நேஷனல் வெல்பர் அசோஷியேஷன்   தலைவர் கே.முஹம்மத் அயூப் நேரில் சென்று பார்வையிட்டு

 பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து தந்தார் இந்த  நிகழ்வின்போது அசோசேசன்  நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர் எஸ்.ஆனந்தன்
Previous Post Next Post