மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை முன்பு, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளனம், மதுரை மாவட்ட புறநகர் பொறுப்புச் செயலாளர், கே.நாஜோதி தலைமையில், நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மண்அடுப்பு மற்றும் மண்பானைக்கு சூடம் பத்தி ,சாம்பிராணி பொருத்தி அதன்முன்பு பூஜை செய்தும், அதன் பின்னர்  
சமையல் கேஸ் சிலிண்டர்க்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தும், பறை அடித்தும் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்தார்கள்.

மேலும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் எம்.கண்ணகி கண்டன உரையாற்றினார், என்.எஃப்.ஐ.டபுள்யூ மாநில குழு உறுப்பினர் எஸ்.சூரியகலா முன்னிலை வகித்தார் , ஆர்.விஜயா, பி.மூக்கம்மாள், பெண்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்கள் விமலா, லோகேஸ்வரி, மாலா,செல்வி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஐம்பதிற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
Previous Post Next Post