திண்டிவனம் கிராம நிர்வாக அலுவலருக்கு
பயிற்சி
திண்டிவனம்
வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை மேற்கொள்ளும் பயிற்சி தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது திண்டிவனம் சார் ஆட்சியாளர் அமித் தலைமை தாங்கினார் தாசில்தார் வசந்த கிருஷ்ணன் முன்னிலை வகித்தார் தலைமை நில அலுவலர் துரைராஜ் வரவேற்றார்
திண்டிவனம் கோட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு உட்பிரிவு மாற்றம் புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகிறது. புலத்தில் நில அளவீடுகள் செய்வது புலப்படம் புலத்தின் உட்பிரிவு எண்கள் வழங்குவது, உட்பிரிவுகள் தயார் செய்வது உடைமையாளர்களின் ஆவணங்களை உறுதிப்படுத்துதல், எல்லைக் கற்களை அடையாளம் காணுதல் போன்றவை குறித்து கிராம நிர்வாக அலுவலர் பயிற்சி அளித்து வருகின்றனர் இந்த பயிற்சியில் திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட (88)கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.