சுரேஷ் செல் : 9791655612 மன்னார்குடி 08.05.2022
பட்டின பிரவேசத்தை தமிழக அரசு தடுத்தால் அமைச்சர்கள் , மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் யாரும் வெளியில் நடமாட முடியாது என அவேசத்தில் பேசிய மன்னார்குடி செண்டலங்கார ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் மன்னார்குடியில் கண்டண ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்
கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் களிமேடு என்ற ஊரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீராமனுஜர் ஜீயர் என்பவர், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனபட்டின பிரவேசத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது பற்றி கூறும் போது, பட்டின பிரவேசத்திற்கு தடை விதிப்பதை ரத்து
செய்யாவிட்டால் தமிழ்நாட்டில் எந்த ஒரு அமைச்சர்களும் , எம்எல்ஏக்களும் யாரும் சாலையில்
நடமாட முடியாது என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனை பொதுவெளியில் பேசியதற்கும் தமிழகத்தில் நிலவி வரும் பொது அமைதிக்கும் மதநல்லினக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசிய மன்னார்குடி செண்டலங்கார ஜீயரை கைது செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு திராவிடர் கழகத்தினர் 250 –க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்நிகழ்ச்சியில் தலைமை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் நடைப்பெற்றது
இதில் முன்னிலை மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் , ஆர்ப்பாட்டதை தொடங்கி வைத்தவர் தி.க. மாநில பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்.
கண்டன உரை : மாவட்ட ஊராட்சி தலைவர் ஜி.பாலு , மதிமுக மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் , சிபிஐ நகரச் செயலாளர் கலைச்செல்வம் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர் காமராசு , விசிக மாநில தொழிலாளரணி துணைச் செயலாளர் ரமணி , மதிமுக நகரச் செயலர் சரவணன், வக்கில் சங்கம் வீரக்குமார் .திக தலைமைக் கழகம் பேச்சாளர்கள் அன்பழகன் , இராம .அன்பழகன் சிங்காரவேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கலந்து கொண்டவர்கள் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர்கள் தஞ்சை அமர் சிங் , நாகை நெப்போலியன் ,திருவாரூர் மோகன் , மயிலாடுதுறை குணசேகர் , பட்டுக்கோட்டை வீரையன் , கும்பகோணம் நிம்மதி , திருச்சி ஆரோக்கியராஜ் , மன்னார்குடி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் தனராஜ் , விசி க நகரச் செயலாளர் அறிவுக் கொடி , தி.க.மண்டல செயலாளர் அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.