இளங்கலை சமூகப்பணித்துறைஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தண்டலைச்சேரி கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் நடத்தும்சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு

இளங்கலை 
சமூகப்பணித்துறை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தண்டலைச்சேரி கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள்
 நடத்தும்
சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு   

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தம்பாடி காந்தியம் வளாகத்தில் தண்டலைச்சேரி அரசு கலைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் சார்பில் சமூக பணித்துறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தண்டலச்சேரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில் திருத்துறைப்பூண்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர்  கலந்துகொண்டு பொதுமக்கள் ஒவ்வொருவரும் வாகன ஓட்டிகள் எவ்வாறு இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும் அரசு விதித்த விதி முறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டுமென அறிவுரைகள் அப்பகுதி பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்  இந்நிகழ்ச்சிக்கு
ஆலத்தம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் R.T.J.ராஜு அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வினை சிறப்பாக
தொகுத்து வழங்கிய இளங்கிள்ளிவளவன் போக்குவரத்து கழகம் அவர்கள்,அலுவலம் உதவி காவல் ஆய்வாளர் பரஞ்சோதி, சமூக ஆர்வலர் டாக்டர் மகேந்திரன் அவர்களும், சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு
 ஏற்படுத்தினர் . நிகழ்ச்சியில் ரேவதி முருகையன் ஊராட்சி மன்ற துணை தலைவர் அவர்கள்,
ஊராட்சி செயலாளர்
 P.ஆர்த்தி 
ஆகியோர் கலந்து கொண்டனர். 
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடுகளை குழு ஆலோசகர்கள் உதவி பேராசிரியர் ப்ரீத்தி அவர்களின், 
ஆலோசனைப்படி  
குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் அஞ்சலி, குருசீலன்,
 உமாசங்கர், சௌமியா, கௌசல்யா, ஷாலினி
ஆகியோர்  சிறப்பானதாகவும், அனைவருக்கும் பயனுள்ள  விழிப்புணர்வு நிகழ்வினை  நடத்தினர். மற்றும் இளைஞர்கள்,
கிராமவாசிகள், ஊர் பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post