இளங்கலை சமூக பணித்துறை ,அரசு கலை மற்றும் அறிவியல். கல்லூரி தண்டலச்சேரி-திருத்துறைப்பூண்டி நடத்திய அலைபேசி சீரழிவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி நெடும்பலத்தில் நடைபெற்றது
.இந்நிகழ்ச்சிக்கு திரஎஸ் தனபாலன், உதவி தலைமையாசிரியர் தலைமை வகித்தார்.திருமதி.கவிதா பாண்டியன் நகர் மன்ற தலைவர் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக திரு .கழனியப்பன் காவல் ஆய்வாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்களான திருமதி. சுமித்தா, திருமதி. மெர்லின் அவர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ராய் டிரஸ்ட் இண்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் நா. துரை ராயப்பன் அவர்கள் அலைபேசி சீரழிவு பற்றி மாணவர்களுக்கு விரிவாக சிறப்புரையாற்றினார்.இறுதியாக கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும், திரு மகேந்திரன் அவர்களின் நாட்டுப்புற இசையும் நடைபெற்றது. ஆசிரியர்கள் திரு.எஸ் கலைச்செல்வன், திரு.M.அன்பு குமார், திரு.யோகராஜன்அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.இந்நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியை எஸ். என்.ப்ரீத்தி அவர்களும், உதவி பேராசிரியை திருமதி. ராஜகுமாரி அவர்களும் மாணவர்களுக்கு ஆலோசகர்களாக செயல்பட்டு, மாணவிகள் செல்வி சுபலட்சுமி, செல்வி ராதா லட்சுமி ,செல்வி சங்கீதா ,செல்வி பவதாரணி, செல்வி. விஜி, செல்வன் பசுபதி ராஜா மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்டு அலைபேசியின் சீரழிவு பற்றிய விழிப்புணர்வை பெற்றனர்.