கவுன்சிலர் மீது எழுந்த புகாரை அடுத்து நிலத்தை கோவிலுக்கு எழுதி கொடுத்த முதியவர்

கவுன்சிலர் மீது எழுந்த புகாரை அடுத்து நிலத்தை கோவிலுக்கு எழுதி கொடுத்த முதியவர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு திமுக கவுன்சிலர் ரேணுகா இளங்கோவன் மீது மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அந்த இடமானது திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்த் ஆச்சாரி என்பவருக்கு  சொந்தமானது என்றும் அந்த  நிலத்தில் வீடு மற்றும் கோவில் கட்டி ஆனந்த் ஆச்சாரி வழிபாடு செய்துவந்துள்ளார். தற்போது கவுன்சிலர் பெயரில் பொய்யாக சிலர் அவதூறு பரப்புவதால் அந்த இடத்தை விஸ்வகர்மா சமுதாய அறக்கட்டளையான மீனாட்சி அம்மன் ஆலயம் அறக்கட்டளைக்கு கிரையம் செய்து கிரைய பாத்திரத்தை உரிமையாளர்கள் இளங்கோவன்,வெங்கடேசன்,பாலசுப்பிரமணியன்,ராமு,முருகன்,தினேஷ்,பாபு ஆகியோரிடம் வழங்கினார்.
Previous Post Next Post