தையல் பயிற்சி முடித்த பயனாளிகளுக்குசான்றிதழ் வழங்கும் விழா.
தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில்
வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் லா தொண்டு நிறுவனங்கள் சார்பாக தையல் பயிற்சி முடித்த 104 பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மயிலாடும்பாறைதனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த நிகழ்வில், வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் திரு. ஞா. ஜெசுகரன் தங்கராஜ் தலைமை தாங்கினார் பயிற்சி பெற்றவர்களை வாழ்த்தி, சான்றிதழ்களை வழங்கினார்.
பயனாளிகளுக்கு அரசு வங்கிகள் மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் கிடைக்கும் கடனுதவிகள் குறித்து, திரு. கணேஷ் குமார், கணக்கெடுப்பு ஆய்வாளர், மாவட்ட தொழில் மையம், மதுரை மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, மேலாளர் சதீஷ் குமார், மெர்கண்டைல் வங்கி ஊழியர்கள் எடுத்து சொல்லி வாழ்த்தினார்கள்
லா தொண்டு நிறுவனச் செயலாளர் திரு. வெங்கடேசன், தலைவர். பா. திலகவதி பாராட்டுரை மற்றும் தொகுப்புரை வழங்கினார்கள்.
பயிற்சி பெற்ற பயனாளிகள் சார்பாக ரஞ்சனி, லதா, லாவண்யா, ஸ்நேகா, காளீஸ்வரி தங்களின் மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தொண்டு நிறுவனத்திற்கு தெரிவித்துப் பேசினார்கள்.
வேர்ல்டு விஷன் இந்தியா ஒருங்கிணைப்பாளர் யோவான் வரவேற்புரை வழங்கினார். சுதா செபாஸ்டி உறுதிமொழி ஏற்க, ஜெயசேகர் அன்பையா நன்றியுரை கூறினார்.