திண்டிவனம் அருகே 6 வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனை நெருப்பில் தள்ளி கொல்ல முயன்றதாக போலீசில் சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி அண்ணா நகர் குளக்கரை தெருவை சேர்ந்த கன்னியப்பன் கூலித்தொழிலாளி வயது 39 பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர்.
இவரது மகன் சுந்தர்ராஜ் வயது 11 அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 6 வகுப்பு படித்து வருகிறார் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் ஒரு மாதத்துக்கு முன்பு சுந்தரராஜ் பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் சாதி பெயரை சொல்லி அழைத்து கிண்டல் செய்து அவமானம் செய்துள்ளனர். இதுதொடர்பாக சுந்தராஜன் அவரது தந்தையுடன் தெரிவித்தார். சகமாணவர்கள் என்பதால் தந்தையும் இதனை கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சிறுவன் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்தார் இதனால் மன உளைச்சல் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.இந் நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து சுந்தர்ராஜ் தனது பாட்டி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கே உள்ள கருமாதி கொட்டகை அருகே நின்றிருந்த 3 மாணவர்கள் இயல்பாக இங்க வாடா என சாதிப்பெயரை சொல்லி திட்டி அழைத்து அங்கே கிராமப்புறத்தில் சுகாதாரத்திற்காக ஒதுக்குப்புறத்தில் குப்பைகளை கொட்டி எரியூட்ட பட்டுள்ளனர் அந்த இடத்தில் சிறுவனை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது .பின்னர் நெருப்பில் விழுந்து படுகாயமடைந்த சுந்தர்ராஜ் துடித்து கூச்சலிட்டார். அங்கிருந்த மூன்று பேரில் 2 மாணவர்கள் அவரை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளனர் பின்னர் சிறுவனின் தாய் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிறுவனின் உடலில் அதிக அளவில் தீக்காயம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் மண்ணம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மாணவனின் சொந்த ஊரான காட்டு ச்சிவிரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியப்பன் தன் மகனை தீயில் தள்ளி விட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்ததின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.