ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ராணிப்பேட்டை 11 வார்டு பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ராணிப்பேட்டை 11 வார்டு பொதுமக்கள் ஆட்சியரிடம்  மனு  

ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை பிஞ்சி ஜெயராம் நகர் 11வது வார்டில் வசித்து வரும் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது  

 நாங்கள் மேற்கண்ட 11-வது வார்டு, பிஞ்சி, ஜெயராம் நகரில் வசித்து
வருகிறோம். இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுக்கா, நரசிங்கபுரம்
கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும்  வசந்த குமார் என்பவர் சுமார் 6
சென்ட் இடத்தை ஆக்கிரமித்து வீடு மற்றும் கழிப்பிடம் மாட்டு
கொட்டகை அமைத்து வருகிறார். ஊர் பொது மக்கள் அனைவரும் ஒன்று
(VAO) வசந்த குமாரிடம் சென்று 

சுமார் 150 ஆண்டு பழமை
வாய்ந்த ராமர் கோயிலினை புதுப்பிக்கவும் மற்றும் சுற்றுபுற சுவர் எழுப்பவும்
ஆலய வழிபாடு செய்ய  ஊர்
பொதுமக்கள் மற்றும் நாட்டாமைதாரர்கள்
சென்று
எத்தனையோ முறை கேட்டுக் கொண்டும் அவர் வேண்டுமென்று ஆலய
வழிபாடு கட்ட வேண்டிய இடத்தை கழிப்பிடம் மற்றும் மாட்டுக் கொட்டகை
கட்டி ஆக்கிரமித்து  வருகிறார். 

அதனை தடுக்க கோரி
பலமுறை வருவாய்
கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித பலனும்
இல்லை. கடந்த 27/12/2021 அன்று மக்கள் குறை தீர்வு நாள் மனு
கொடுத்துள்ளோம். மீண்டும் 02/02/2022 அன்று வருவாய் கோட்டாட்சியர்
அலுவலகத்தில் ஊர்
பொதுமக்கள் அனைவரும் சென்று புகார் மனு
அளித்தோம் அதன் பின்னர்தான் பிஞ்சி கிராம நிர்வாக அலுவலர் மற்றும்
வருவாய் ஆய்வாளர் மற்றும் TSOஆகியோர்கள்  அவ்விடத்தை
நேரில் பார்வையிட்டு

 வசந்தகுமார் (VAO) என்பவரிடம் வழிப்பாட்டு பாதையை 
 ஆக்கிரமிக்காதே என்று வாய் வழியாக கூறி விட்டு சென்று விட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும்
பெரியோர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். நீங்கள் எந்த
அதிகாரி இடத்தில் புகார் மனு அளித்தாலும் என்னை ஒன்றும் செய்ய
முடியாது என்றும் மேலும் மேலும் கட்டி வருவேன்

 என்றும் உங்களால்
என்னை ஒன்றும் புடுங்க முடியாது
என்றும் தகாத வார்த்தையால்
அனைவரையும் மிரட்டி வருகிறார். நான் ஒரு அரசு ஊழியர் என்பதால்
உங்களால் ஒரு மயிறை கூட புடுங்க முடியாது எனவும் ஏலனமாகவும் பேசி
வருகிறார்.  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால்  தாங்கள் நேரடியாக
அவ்விடத்தை பார்வையிட்டு மிகவும் பழமையான கோவிலை மீட்டு கட்டி
புதுபித்து  பொது மக்களுக்கு ஆலய வழிபாடு செய்ய வழிவகை
செய்யது தர கேட்டுக்கொள்கிறோம் 

மேலும்  விஏஓ வசந்தகுமார்
இடத்தை ஆக்கிரமித்து   வீடு, கழிப்பிடம் கட்டினது மட்டுமல்லாமல்  பாலத்தின் தடுப்பு
சுவரை இடித்து வழி வைத்துள்ளார் மேலும்  மறைந்த M.P. ஜெயராம்
அவர்களின் நுழைவு வாயிலை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டு வருகிறார் 
கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் 
மீது துறை ரீதியாக நடவடிக்கை
எடுக்குமாறும் மற்றும் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் 27/12/2021 அன்று
கட்டிட  வேலையை துவங்கும் போது மனு அளித்தோம். 

ஆனால்
இப்பொழுது கட்டுமான
வேலையை முடித்து
விட்டனர் என்பதனை
இப்பொழுது அளிக்கும் மனுவில் தெரிவித்து கொள்கிறோம். எனவே
மாவட்ட ஆட்சியர் அவர்கள் அவ்விடத்தை மீட்டும் ஆக்கிரமித்து கட்டிய
வேலையை அகற்றியும் தர மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post