திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு ரத்ததான முகாம்

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு ரத்ததான முகாம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திரு கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பாக சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது இந்த சிறப்பு ரத்ததான முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பால் கிரேஸ். அவர்கள் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். செஞ்சுருள் சங்கம் ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் குமார் அவர்கள் ரத்த தான முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தார். இதில் ஒலக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் செந்தில்குமார் மற்றும் இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் பாரதி  ஒலக்கூர் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் டாக்டர் சரண்யா மற்றும் மருத்துவ அலுவலர்கள் மருத்துவ குழுவினர் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வுகளை எடுத்துக் கூறினர் இதில் 2 உதவிப் பேராசிரியர்கள் 1 கௌரவ முதுநிலை  மாணவர்கள்.64. இளநிலை மாணவர்கள் மொத்தம் 80 பேர் இரத்த தானம் வழங்கினர் இரத்ததானம் வழங்கியவார்களை மருத்துவர்கள் பாராட்டி சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் அவர்களிடம்  மருத்துவர் பாரதி வழங்கினார். இதில் கல்லூரிப் பேராசிரியர்கள் அலுவலர்கள் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post