மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவில் வண்டுகள்
புழுக்கள், புலம்பிய பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் வாலாஜாவில் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம்
31.03.22
வாலாஜா நகராட்சி 9வது வார்டில் அரசு நகராட்சி இருபாலர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி வளாகத்தில் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது
நடுநிலை பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக லட்சுமி என்பவரும் சமையலராக மஞ்சுளா என்பவரும், அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளராக தில்லை, சமையலராக விசாலாட்சி என்பவரும்
பணிபுரிந்து வருகின்றனர் இவர்கள் மாணவர்களுக்கு சமைத்து வழங்கப்படும் மதிய உணவில் வண்டுகள், புழு,மற்றும் அரிசியை சரியான முறையில் சுத்தப்படுத்தி தண்ணீரில் அலசி சமைக்காததால் நாற்றம் எடுத்து வருவதாகவும் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்
மேலும் நேற்றைய முன் தினம் அங்கன்வாடி மற்றும் பள்ளியில் வழங்கிய மதிய உணவில் கருப்பு வண்டுகள்
கலந்த உணவை வழங்கியதாக சொல்கிறார்கள்
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்டபோது உணவின்றி படிக்க இயலாத ஏழை,எளிய மாணவர்களுக்கு அரசு மதிய உணவு வழங்கி வருகிறது
இதனை பொறுப்பேற்று சமைத்து மாணவர்களுக்கு வழங்கும் அமைப்பாளர் மற்றும் சமையலர்கள் பெற்றோருக்கு சமமானவர்கள் ஆனால் இவர்கள் உணவு பொருட்களை சரியான முறையில் சுத்தப்படுத்தாமல் சுகாதாரமற்ற முறையில் சமைத்து மாணவர்களுக்கு வழங்கி வருவது வருத்தமாக இருக்கிறது
என்றனர்
மேலும் அவர்கள் பேசிய போது பள்ளி செயல்பட்டு வரும் 9 வார்டு கவுன்சிலர் தீபா சசிகுமார் இரண்டாவது முறை இந்த வார்டில் கவுன்சிலராக வந்திருக்கிறார் இது சம்பந்தமாக அவரிடம் சொல்லியும் கண்டுகொள்ளவே இல்லை என்கின்றனர் மேலும் அந்தப் பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வரும் மஞ்சுளா பாஸ்கரன் கவுன்சிலருக்கு சொந்தகாரர் என்பதாலும் அதிமுக கட்சியினர் பின்புலமாக இருப்பதாலும்
பள்ளிக்கு தலைவரைப் போல செயல்பட்டு வருகிறார் என்றனர் மதிய உணவு சுகாதாரமற்ற நிலைக்கு இருப்பதற்கு இவர்தான் மிக முக்கிய காரணம் என்கின்றனர் இதனால் தான் பெரும்பான்மையான பெற்றோர்கள் மதிய நேரத்தில் வீட்டிலிருந்து சமைத்து பிள்ளைகளுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கின்றனர்
பள்ளியில் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் சாப்பாடு வாங்காத பிள்ளைகளெல்லாம் வாங்கியதாக கணக்கு காட்டி அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் முட்டைகளை கொள்ளையடித்து வருகின்றனர் என்றனர் மேலும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் கற்பிப்பது கிடையாது,
செல்போன்களை வைத்து படம் பார்ப்பது,
விளையாடுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றனர் தனியார் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம் முதல் 20 வரைதான் சம்பளம் பெறுகின்றனர் ஆனாலும் அவர்கள் சிறந்த முறையில் பாடங்களைக் கற்பித்து மாணவர்களை திறமை உள்ளவர்களாக மாற்றுகின்றனர் அரசுப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு இது போன்று பத்து மடங்கு சம்பளம் வாங்குகின்றனர்
ஆனால் இவர்கள் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் கற்பிப்பது கிடையாது, ஒழுக்கங்களை சொல்லித் தருவது கிடையாது, பள்ளியில் மாணவர்கள் ஆடு மாடுகளைப் போல சுற்றித் திரிகிறார்கள் வகுப்பறையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது ஆங்கில வழி கல்வி கற்கும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசுவதும் கிடையாது
முன்பு இருந்த ஆசிரியர்கள் எல்லாம் பாடம் படித்து அதில் உள்ள குறிப்புகளை எடுத்து மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவார்கள் ஆனால் இப்பொழுது உள்ள ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு நெட்ல பார்த்து குறிப்புகளை எடுத்து வந்து பாடம் சொல்லித் தருகிறார்கள் என்றனர்
பாடத்தை கூட ஒழுங்கா நடத்துவது கிடையாது
ஏதோ? வந்தோமா! மாட்டை மேய்த்தோமா! கோலை போட்டுமா! என்ற கதையா கடமைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு போகிறார்கள் இந்த ஆசிரியர்களுக்கு எங்களுடைய நிலைமை புரிய வேண்டுமானால் இவர்களின் பிள்ளைகளையும் அரசுப் பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்
அப்பொழுது தான் எங்களுடைய நிலைமை இவர்களுக்குப் புரியும் ஆசிரியர்கள் அவருடைய பிள்ளைகளை மாத்திரம் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள் ஏனென்றால் அரசு பள்ளியில் சரியான முறையில் பாடம் கற்பிப்பது கிடையாது ஒழுக்கம் கிடையாது என்பது அவர்களுக்கே தெரிந்திருக்கிறது இப்படி அரைகுறையா பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு அநியாயமாய் சம்பளம் வாங்கி செல்லும் ஆசிரியர்களுக்கு சாபம்தான் வரும் என்றனர்
மேலும் அவர்கள் பேசியபோது வாலாஜாவில் செயல்பட்டு வரும் பெரும்பான்மையான அரசு பள்ளிகளின்நிலை இப்படித்தான் இருக்கிறது எனவே துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு இதுபோன்ற சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இவர்களை பணியிடை மாற்றம் செய்ய வேண்டும்
என்றனர்
மேலும் ஒவ்வொரு மாதமும் பள்ளிகளில் ஆய்வு செய்யது மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தீபா சசிகுமார் பாரபட்சமின்றி பள்ளியின் மீதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.