சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப்பணி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப்பணி 


சிதம்பரம்,கடலூர் மாவட்டம்,சிதம்பரத்தில்  புகழ் மிக்க நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் உற்சவம் நேற்று முன்நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய விழாவான வருகிற டிசம்பர் 19-ந்தேதி தேர் உற்சவமும் ,20-ந்தேதி ஆருத்ரா தரிசன உற்சவமும் நடைபெறுகிறது விழாவினை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரம் கால் மண்டபத்திலும் ,கோயில் சுற்று பிரகாரம் கோயில் மண்டபத்திலும் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.இப்பணியில்  பாஸ்கர் தீட்சிதர், திருச்சி தமிழ்மணி,சதாசிவம், சிவனடியார்கள், சிவபக்தர்கள்,தீட்சிதர்கள், சிவதொண்டர்கள், ஆன்மீகவாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு உழவாரம் பணியை பணியில் ஈடுபட்டனர்.
Previous Post Next Post