ஆற்காடு ஜெயா மருத்துவமனையில் பொங்கல் விழா சிறப்பு கொண்டாட்டம்

ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் செயல்பட்டு வரும் ஜெயா மருத்துவமனையில் பொங்கல் விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மருத்துவமனையின் தலைவரும், திமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட மருத்துவர் அணி  அமைப்பாளருமான டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார்; அவரது துணைவியார் ஆற்காடு நகர மன்ற துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன் முன்னிலை வகித்தார். விழாவில் சூரிய பகவானுக்குப் புதுப் பானையில் பொங்கலிட்டு, "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டு வழிபாடு செய்த நிலையில், புத்தாடை அணிந்து பங்கேற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு அறுசுவை உணவருந்தி மகிழ்ந்தனர்.
Previous Post Next Post