கூடலூரில் நூறாண்டுகளை கடந்து சிலுவைக் கொடி சுற்றும் விழா வெகு விமரிசையாக ஆடல் பாடலுடன் கொண்டாடப்பட்டது.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூரில் நூற்றாண்டு பழைமையான சிஎஸ்ஐ தேவாலயம் அமைந்துள்ளது. சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கிறிஸ்தவ மதத்தை தழுவி  உள்ளனர்.
 நூறாண்டுகளை கடந்து கொடி சுற்றும் விழாவானது தொடர்ந்து கிறிஸ்தவ பொதுமக்கள் வாழும் சிஎஸ்ஐ சர்ச் தெரு ஆகிய பகுதிகளில் தங்களது வீடுகளில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள கொடியினை மந்திரத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கூடலூர் முக்கிய நகர் பகுதி வழியாக கூலிக்காரன் பாலம் வீதி, சாமி வீடு வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் வீதி, பள்ளிவாசல் வீதி, என நகரின் முக்கிய வீதி வழியாக கொடிசுற்றி வருகின்றார்கள்.
 ஊர்வலத்தின் போது கிறிஸ்தவ பாடல்கள் இசை கச்சேரிகளாக முழங்கப்பட்டு ஆடல் பாடல் என சிலுவை கொடியினை ஆரவாரத்துடன் ஆடி பாடி கொண்டாடி வருகின்றனர்.

 தேவாலயத்தை வந்து அடைந்தவுடன் மக்கள் கொண்டு வந்த கொடிகளில் ஒரு கொடி தேர்வு செய்யப்பட்டு தேவாலயத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது அதனைத் தொடர்ந்து  ஆராதனையும் ஜெபக்கீர்த்தனையும் நடைபெற்று புத்தாண்டு கொண்டாட்டம் நிறைவு பெறுகிறது......
Previous Post Next Post