ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஜி டி நல்லூர் தொகுதியைச் தெலுங்கு தேசம் பார்ட்டி எம் எல் ஏ டாக்டர் வி.எம் தாமஸ் எஸ் ஆர் புறம் மண்டலம் புல்லூர் கிராமத்தில் காஸ்புல் ஃபார் நேசன் பாஸ்டர் அசோசியேசன் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
அப்போது அவர் பேசியபோது
எனக்காக நீங்கள் அனைவரும் செய்த ஜெபங்களைவிட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை. வெளிப்படையாகவும், உறுதியாகவும் , தனிமையிலும் நீங்கள் செய்த ஒவ்வொரு ஜெபத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். நான் ஒரு சிறிய கிராமத்தில், கல்வியற்ற பெற்றோருக்கு பிறந்தவன். என் வாழ்க்கையில் எந்த வசதிகளும் இல்லை. ஆனால் என் கிராம மக்களும், தேவாலய மக்களும் செய்த பிரார்த்தனைகளின் பலனால், கடவுள் என்னை மருத்துவ சேவைக்காகத் தேர்ந்தெடுத்தார்.
என் சிறுவயதில் நடந்த ஒரு ஜெப அனுபவம் என் வாழ்க்கையின் திசையை மாற்றியது. எனக்காக யாவரும் மண்டியிட்டு செய்த ஜெபம், கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தியது. அதற்கான அர்த்தம் அப்போது புரியவில்லை. பின்னர் கல்வி, பல்கலைக்கழகம், என படிப்படியாக முன்னேறி, டெஸ்ட் டியூப் பேபி மருத்துவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், எதிர்பாராத சூழ்நிலையில் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதில் 19 டெஸ்ட் டியூப் மூலம் கருத்தரிக்க செய்தது கடவுளின் கிருபை. இதன் மூலம் உலகம் முழுவதும் மருத்துவ சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை சுமார் 75,000 குழந்தையில்லா குடும்பங்களுக்கு சந்தோஷம் அளித்துள்ளேன்.
என் வாழ்க்கை முழுவதும் கடவுளின் திட்டப்படி நகர்ந்துள்ளது. நான் அரசியலுக்குள் வருவேன், எம்.எல்.ஏ. ஆகுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் ஏழை, பலவீனமான மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்குடன் வந்தேன். நான் எங்கு சென்றாலும், மக்கள் நம்பிக்கையுடன் என்னை நாடுகிறார்கள்; காரணம்—நீதி, நேர்மை மற்றும் ஊழலற்ற சேவை.
யோசேப்பு, யோனா போன்ற வேதக் கதைகள் போல, சோதனைகள் வழியாக கடவுள் உயர்த்துகிறார் என்பதை என் வாழ்க்கை நிரூபிக்கிறது. எனவே, கடவுள் என்னை இங்கே கொண்டு வந்ததற்கு ஒரு திட்டம் இருக்கிறது. அந்த திட்டத்தை நிறைவேற்ற, அனைவருக்கும் நீதி செய்ய, நல்லது செய்ய நான் உறுதியாக இருக்கிறேன்.
உங்கள் ஜெபங்களால்தான், 30 ஆண்டுகளாக வெற்றி பெறாத ஒரு வேட்பாளர் வரலாற்றை மாற்றி, என்னை எம்.எல்.ஏ. ஆக உருவாக்க முடிந்தது. இதற்காக மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார் இந்நிகழ்வில் போதகர் எஸ் ஏசண்ணா, போதகர், உமாசங்கர் ஜெயசங்கர், மோகன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த போதகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்விற்கு வந்த அனைவருக்கும்
புத்தாடை மற்றும் சிறப்பு வெகுமதி வழங்கப்பட்டது ஜிடி நல்லூர் தொகுதியில் மட்டும் சுமார் 4000 பேருக்கு புத்தாடை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.