தேவாரத்தில் 14 கிலோ கஞ்சாவுடன் பதுங்கி இருந்த கும்பலை சுற்றிவளைத்த காவல்துறையினர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐந்து நபர்கள் கைது.!




தேனி மாவட்டம் தேவாரம் பகுதிகளில் சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது.

 இந்நிலையில் தேவாரம் சின்னதேவி குளம் அருகே உள்ள செல்லாயி அம்மன் கோவிலில் வட மாநிலத்தவர்கள் உடன் சில்லறை கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் ஒன்று கூடி உள்ளதாக தேவாரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் அய்யம்மாள் ஜோதி உத்தரவின் படி சார்பு ஆய்வாளர் அரசு தலைமையில்  காவல்துறையினர்  விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்தனர் . அவர்களிடம் சோதனை செய்ததில்  2 கிலோ மதிப்பிலான ஏழு பொட்டணங்களில் 14 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.  

பிடிப்பட்ட ஐந்து நபர்களில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த  மாதவராவ் மற்றும் நாகலப்பனா  ஆகிய இருவரும் சில்லறை விற்பனை செய்யும் தேவாரம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் சிலம்பரசன் சின்னமனூரைச் சேர்ந்த அறிவழகன் உள்ளிட்ட  மூன்று நபர்களிடம் மூன்று பொட்டலங்களை வழங்கிவிட்டு  மேலும் சிலரிடம் நான்கு பொட்டலங்களை வழங்குவதற்காக காத்திருந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.  
பிடிப்பட்ட நபர்கள் தொடர்ச்சியாக சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் தேவாரம் மற்றும் சின்னமனூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.....
Previous Post Next Post