தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அட்டை வழங்கி முழு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள்  மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட  ஏராளமானோர் பங்கேற்பு.



தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அனுப்பப்பட்டி  திம்மரச நாயக்கனூர் ஏத்தகோவில் உள்ளிட்ட பல ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

மாற்று திறனாளிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகளை தடுக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் அனுப்பப்பட்டி  ஊராட்சியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் வீட்டு வரி ரசீது வழங்கியதை கண்டித்தும்.

உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியினரும் கலந்து கொண்டனர்.....

Previous Post Next Post