மன்னார்குடி சுற்று வட்டார பகுதிகளில் சம்பா நடவு பணி தீவிரம் உடல் சோர்வு ஏற்படாத வகையில் கிராமிய பாடல்கள் பாடி நடவு பணியில் ஈடுபட்டு வரும் தமிழக பெண் தொழிலாளர்கள்...
காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டம் திருவாரூர் மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் மிகுந்த மாவட்டத்தில் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணியானது மாவட்ட வேளாண் துறை மூலம் 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, தாளடி, சம்பா என மூன்று பருவ சாகுபடி மேற்கொள்வது வழக்கம். அதன் அடிப்படையில் பருவமழையை நம்பி ஒரு போக சாகுபடியாக மேற்கொள்ளப்படும் சம்பா சாகுபடி பணியானது கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தாளடி, நடவு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று பருவமழைக்கு முன்பாக தாளடி விவசாய பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமபுரம் கிராமத்தில் தமிழக கிராம பெண் விவசாய தொழிலாளர்கள் உடல் சோர்வு ஏற்படாதவாறு மக்கள் இசை பாடல் பாடி விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

