சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ம் நாளாக புதன்கிழமை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
7 வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், முனைவர் பட்ட ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும், அயற்பணியிட ஆசிரியர்களை உடனே உள்ளெடுப்பு செய்ய வேண்டும், பல்கலைக்கழக துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அயற்பணியிட ஆசிரியர்களைக் கொண்டு யுஜிசி மற்றும் தமிழக அரசின் விதிமுறைகளின்படி வாரத்திற்கு ஒருவரை திரும்ப அழைக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுத்துறைகளைப் போலவே அனைத்து பணப்பயன்களையும் ஓய்வு பெற்ற உடனேயே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக கட்டிடத்தில் கீழ் பகுதியில் தரையில் அமர்ந்து திங்கள்கிழமை முதல் தேர்வு பணிகளை புறக்கணித்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதன்கிழமை காலை நடைபெற்ற 3ம் நாள் போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற பொறுப்பாளர் கேவிஎம்எஸ்.சரவணகுமார், மாவட்ட துணைத்தலைவர் கோபிநாத் கணேசன், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் பெருமாள், முன்னால் பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் வெற்றிவேல், இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் விஷால் மற்றும் நிர்வாகிகள் பகிரதன், வினோத்குமார், பிரபாகரன், கல்யாணசுந்தரம், பில்லா, கிருஷ்ணராஜ், ரவிச்சந்திரன், பிருத்திவிராஜ், தினேஷ்குமார், சிவக்குமார், செயலாளர் லெட்சுமிபதி உள்ளிட்டோர் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். போராட்டத்திற்கு பேராசிரியர்கள் சி.சுப்பிரமணியன், செல்வராஜ், பேராசிரியர் இரா. முத்து வேலாயுதம், துரை அசோகன், காயத்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்