உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில்போதிய மருத்துவர்பற்றாக்குறையை கண்டித்தும்அடிப்படை வசதி இல்லாததை கண்டித்தும் மருத்துவமனை வரக்கூடிய நோயாளிகளுடன் அலட்சியமாக நடந்து கொள்வதை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!




தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்அரசு மருத்துவமனை அமைந்துள்ளது இந்த மருத்துவமனைக்கு உத்தம பாளையத்தை சுற்றியுள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் உள் நோயாளிகள் வெளி நோயாளிகள் தினந்தோறும் 1000க்கும் மேற்பட்டோர் வந்து செல்வதை வழக்கம்.
இவ்வாறு இருக்கும் சூழலில் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பற்றாக்குறை கண்டித்தும் தொடர்ந்து பொதுமக்களை அலட்சியமாக நடத்தி வருவதும் அவல போக்கை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள்போராட்டம் நடத்தி வந்த நிலையில்  இன்று உத்தமபாளையம் பைபாஸ் சில் எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து 30 மருத்துவர்கள் இருக்கக்கூடிய உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகவும் அதில் இரண்டு மருத்துவர்கள் விடுமுறையில் சென்று விட்டால் போதிய மருத்துவர்கள் இல்லாததால் இந்த மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் பெரும் அல்லலுக்கு ஆளாகப்பட்டு வருகின்றன. 

விபத்து நேரத்தில் நோயாளிகளை கொண்டு வந்தால் உடனடியாக அவர்களை தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படும் அவல நிலை உள்ளது இந்த மருத்துவமனையில் புதிதாக பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து உத்தமபாளையம் தலைமை மருத்துவமனையாக திகழக்கூடிய இந்த அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு மருத்துவ உபகரணம் இல்லை என்றும் குற்றச்சாட்டில் இருந்துள்ளது.

தொடர்ந்து அறுவை அரங்கு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சி டி ஸ்கேன் வசதி இல்லை பல்வேறு புகார்கள் எழுந்து வரும் சூழலில் இவற்றை நிவர்த்தி செய்ய கூடிய மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து இன்றுஎஸ்டிபிஐ கட்சியின் சார்பில் உத்தமபாளையம் பைபாஸில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ...
Previous Post Next Post