பரந்தூர் விமான நிலையம் மச்சேந்திரநாதன் அறிக்கையை வெளியிடாதது ஏன்?
நில ஒருங்கிணைப்பு சட்டம்.2023 விளை நிலங்களையும்,
நீர்நிலைகளையும் அபகரிக்கும். விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கிறது.
வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உரம் குறித்தான அறிக்கை உண்மைக்கு புறம்பானது.
பிஆர்.பாண்டியன் கண்டனம்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் சென்னை பெசன்ட் நகர் தலைமையிடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் சென்னை,வேலூர், ஓசூர் என மூன்று இடங்களில் 200 கிலோமீட்டருக்குள்ளாக மூன்று விமான நிலையங்கள் இருக்கும்போது, பரந்தூர் விமான நிலையம் அமைப்பது ஏன்? என்பதை முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 4000 ஏக்கர் பரப்பிலான ஏரிகள் அதனுடைய வரத்து வடிகால் கால்வாய்களை அபகரிப்பதால் சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
தற்போது பாலாற்றில் வரும் உபரி நீர் காவேரிப்பாக்கம் கால்வாயில் திறக்கப்படுகிறது. உபரி நீர் ஏகநாபுரம், பரந்தூர் ஏரிகள் நிரம்பி உபரி நீர் கூவம் மடுவு வழியாக ஸ்ரீபெரும்புதூர் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வந்தடையும்.உபரி நீர் கொசஸ்தலை கால்வாய் வழியாக கடலில் கலக்கும் வகையிலான நீர் வழி பாதைகளையும், ஏரிகளையும் அபகரிப்பதின் மூலம் ஒட்டுமொத்த சென்னை பேராபத்தை சந்திக்கும்.
இதுகுறித்து ஆய்வு செய்வதற்கு முன்னால் ஐஏஎஸ் அதிகாரி
மச்சேந்திரநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு அறிக்கையை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை வெளியிடாது ஏன்? என்கிற கேள்வி விவசாயிகளிடம் எழுந்துள்ளது.இது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 ஒட்டுமொத்த விளை நிலங்களையும் விவசாயிகள் ஒப்புதலின்றி அபகரிப்பதற்கும், அருகில் உள்ள நீர்நிலைகள் ஏரிகள் வரத்து கால்வாய்கள் ஆறுகள் உள்ளிட்ட அனைத்தையும் அபகரித்துக் கொள்வதற்கு வழிவகுக்குக்கிறது. நீர்நிலை,வனத்துறை வகைப்பாடுகளை மாற்றிக் கொள்வதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது. எனவே இச்சட்டத்தை திரும்ப பெறவிட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் பாலைவனமாக மாறிவிடும் என எச்சரிக்கிறேன்.
இச்சட்டத்தை பயன்படுத்தி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையும் வகைப்பாட்டை மாற்றி கட்டுமான நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு முதலமைச்சர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யும் முதல்வர்,சட்டம் போட்டு அபகரிப்ப
வழிவகுத்துவிட்டு விளம்பரத்திற்காக நடத்தப்படுகிற கூட்டமாக அமைந்து விடுகிறது.இந்தியாவில் எந்த மாநிலமும் கொண்டு வராத சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளையும் பொதுமக்களையும் அழிக்க துடிக்கும் முதலமைச்சர் எந்த கொம்பனாலும் என் ஆட்சியை அசைக்க முடியாது என்று சவால் விடுகிறார்.ஆனால் மக்களை கைவிட்டு விட்டு ஆட்சியை காப்பாற்றி விடுவேன் என்பது ஏமாற்றமே அளிக்கும். அதிகாரத்தை வழங்குவதும், அகற்றுவதும் மக்கள் தான் என்பதை உணர வேண்டும்.
காப்பீடு திட்டம் கார்ப்பரேட்டு
ஆதரவான வகையில் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசுதான் கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பீட்டு திட்டத்தில் ஒப்பந்தம் செய்கிற அதிகாரம் மிக்கது. ஆனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய வேளாண்
காப்பீடு திட்டம் நடைமுறையில் உள்ள போது அதனை தவிர்த்து விட்டு தனியாரை ஊக்கப்படுத்தும் திமுக அரசின் நடவடிக்கை சுயநல நோக்கம் கொண்டது. விவசாயிகளுக்கு இழப்பீட்டையும் பெற்று தருவதற்கு முன் வருவதில்லை. மாறாகஆண்டுக்கு ரூபாய் 5000 ம் கோடியை விவசாயிகள் பெயரில் கார்ப்பரேட்டுகள் அபகரிக்க தமிழக வேளாண் துறை துணை போகிறது.
டிஏபி, யூரியா, பொட்டாஷ் உரம் த இணை இடுபொருள் கட்டாய விற்பனை குறித்தும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உற்பத்தி நிறுவனங்கள் இணை இடுப்பொருட்களை பெற்றுக் கொள்ளும் வணிக நிறுவனங்களுக்கு மட்டும்தான் உரங்களை விநியோகம் செய்கிறது.குறிப்பாக ஒரு மூட்டை யூரிவா ரூ.270 என்றால் கூடுதலாக இணை இடுபொருள் ரூ 500 முதல் 700 வரை விலை நிர்ணயித்து இணை இடுபொருட்களை முன்கூட்டி பெற்றுக் கொள்ளும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே உரம் வழங்குகிறது.
இது குறித்தான முழு உண்மையும் வேளாண் துறைக்கு தெரியும். தெரிந்தும் உற்பத்தி நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து விவசாயிகளை மிக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளுகிறது. குறிப்பாக வணிக நிறுவனங்களை இழுத்து மூடுவோம் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வதெல்லாம் கண்துடைப்பு நாடகமாகும்.
எனவே மத்திய அரசிற்கு முதலமைச்சரிடம்உன்முறையை எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுத்து உற்பத்தி நிறுவனங்களை இணை இடுபொருள் விற்பனை கட்டாயப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.மாறாக வணிக நிறுவனங்களை மூடுவதும் நடவடிக்கை எடுப்பதும் விவசாயிகளை பாதிப்புக்கு ஆளாக்கும்.எனவே உண்மையை மூடி மறைத்து சுயநலத்திற்காக உற்பத்தி நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து சில்லரை வணிகர்களை மிரட்டும் செயல்பாட்டை வேளாண் துறை மாற்றிக்கொள்ள வேண்டும்.
செறிவூட்டப்பட்ட அரிசிக்கான அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.ஏழு அரவை ஆலைகளுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு ஒரு ஆலைக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பின்னடைவை சந்திக்கும்.நெல் இயக்கம் மிகப் பெரும் பாதிப்படையிம் . அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். என்பதை உணர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்திற்கு கால நீட்டிப்பு பெறவேண்டும்.
நெல் கொள்முதலில் தனியார் அனுமதிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார்.
மாநில பொதுச் செயலாளர் வி கே வி துரைசாமி,உயர் மட்டக்குழு உறுப்பினர் சென்னை அசோக்லோதா,
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு செயலாளர் கதிரேசன், சென்னை மாநகர செயலாளர் செல்வராஜ், பொருளாளர் துரைக்கண்ணு, தாமஸ்மலை ஒன்றிய பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.