தூத்துக்குடி மாவட்ட Q பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் திருமதி விஜய் அனிதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார் இசக்கிமுத்து காவலர்கள் பழனி பாலமுருகன் கப்ரியல் பேச்சி ராஜா ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புல்லாவெளி கடற்கரை பகுதியில் ரோந்து சென்ற போது
புல்லா வெளியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் 31.10.2025 அதிகாலை 03.30மணிக்கு இலங்கைக்கு கடத்துவதற்காக. TN 92 L 8129 என்ற பதிவு எண் BOLERO MAX PICKUP லோடு வண்டியில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டை பீடி இலைகளுடன் வந்த வாகனத்தை நிறுத்தியபோது அதன் ஓட்டுனர் நிறுத்தாமல் சென்றவரை பின்தொடர்ந்து விரட்டி வந்து தூத்துக்குடி ரூரல் உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடத்தூர் விலக்கு அருகே மடக்கி பிடித்துள்ளார்கள்
வாகனத்தின் ஓட்டுநரான
மதியழகன் 39/25
S/o அய்யம்பாண்டி
No 175 காந்திநகர் முள்ளக்காடு
.முருக பிரசாத் 22/25
S/o செல்வம்
No 04/13 வடக்குத்தெரு
பொட்டல் காடு
முத்தையாபுரம்
ஆகியோர்
பிடிபட்டுள்ளார்கள்
பிடிபட்டுள்ள பீடி இலை மூட்டைகளின் மொத்த மதிப்பு ரூபாய் 60 லட்சமாகும்